நீட் - இயற்பியல் - வேலை, ஆற்றல் மற்றும் திறன்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

ஒரே உயரத்திலிருந்து கீழே விடப்படும் A மற்றும் B என்ற இரு பொருட்களின் நிறைகளின் விகிதம் 5:1 அவை தரையை அடைவதற்கு சற்று முன்னால் அவைகளின் உந்தங்களின்  விகிதம் _______.

  • A 1 : 5
  • B 5 : 1
  • C 1 : \(\sqrt { 5 } \)
  • D 1 : 10

Question - 2

இரு பில்லியர்டு பந்துகளின் முழு மீட்சி மோதலை குறிக்கும் வரைபடம் எது? (R =ஒவ்வொரு பந்தின் ஆரம் )

  • A
  • B
  • C
  • D

Question - 3

ஆய அமைப்பு ஒன்றில் y அச்சின் வழியே செல்லும் பொருள் ஒன்று \(\vec { F } =\left( -\vec { i } +2\vec { j } +3\vec { k } \right) N\) என்ற விசைக்கு உட்படுகிறது, y அச்சின் வழியே 5ம் தொலைவிற்கு விசையானது பொருளை நகர்த்தினால் விசையினால் செய்யப்பட்ட வேலை _______.

  • A 5 J
  • B 2 J
  • C 1 J
  • D 10 J

Question - 4

சுருள்வில் ஒன்றை x தொலைவிற்கு இழுக்கும் போது அது பெற்றிருக்கும் நிலை ஆற்றல் 20 J .மீண்டும் அதனை x தொலைவிற்கு இழுக்க தேவையான ஆற்றல்_______.

  • A 20 J
  • B 40 J
  • C 60 J
  • D 10 J

Question - 5

m  நிறையுடைய துகள் ஒன்று மாறாத ஆரம் r கொண்ட வட்டபாதையில் சுற்றியக்கம் செய்யும் போது 't' கணத்தில் அதன் மைய நோக்கு முடுக்கம் = K2 rt2, k என்பது மாறிலியாகும். விசையினால் துகளிற்கு அளிக்கப்பட்ட திறன் _______.

  • A mk2r2t
  • B mk2rt2
  • C m2k2r2t
  • D m2k2r2t2

Question - 6

ஓய்வு நிலையிலுள்ள 1 kg நிறையுடைய பொருள் ஒன்று 1 : 1 : 3 என்று மூன்று நிறை விகிதங்களில் வெடித்து சிதறுகிறது. இவற்றில் சம நிறையுடைய இரு துண்டுகள் ஒவ்வொன்றும் 30ms-1 திசைவேகம் பெற்று ஒன்றுக்கொன்று செங்குத்தான திசையில் செல்கின்றன. நிறை அதிகமானத் துண்டின் திசைவேகம் _______.

  • A 12.5 ms-1
  • B 10.2 ms-1
  • C 14.1 ms-1
  • D 7.5 ms-1

Question - 7

1g மற்றும் 4g நிறையுடைய இரு பொருள்கள் சம இயக்க ஆற்றலுடன் இயங்குகின்றன, அவைகளின் நேர்கோட்டு உந்துகளின் விகிதம் முறையே _______.

  • A 1 : 4
  • B \(\sqrt { 2 } :1\)
  • C 1 : 2
  • D 1 : 16

Question - 8

2kg நிறையுடைய  பொருள் ஒன்று 3ms-1 என்ற திசை வேகத்தில் சென்று 4kg நீர் நிறையுடைய  பொருளோடு மோதி ஒட்டிக் கொள்கிறது. இணைந்தபின் அவற்றின் திசைவேகம் (ms-1)ல் _______.

  • A 4
  • B 2
  • C 1
  • D 1.5

Question - 9

ஒரு நிலையைச் சார்ந்த விசை F = (7 - 2x - 6x2)N 2kg  நிறையுடைய  பொருள் ஒன்றின் மீது செயல்பட்டு பொருளை x = 0 என்ற நிலையிலிருந்து x = 2m என்ற நிலைக்கு இடபெயர்ச்சி செய்யப்பட்ட வேலை_______.

  • A -2 J
  • B -6 J
  • C 236 J
  • D 124 J

Question - 10

10g நிறையுடைய குண்டு ஒன்று 500ms-1 திசைவேகத்தில் சென்று மரக்கட்டை ஒன்றின் மீது மோதி 10cm ஆழம் வரை துளைத்து கொண்டு செல்கிறது. குண்டை நிறுத்துவதற்குத் தேவையான சராசரி விசை _______. 

  • A 8 x 103 N
  • B 5 x 103 N
  • C 10 x 103 N
  • D 2 x 103N