நீட் - இயற்பியல் - மின்னோட்டத்தின் காந்த விளைவு மற்றும் காந்தவிசை

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

இரு சுற்றுகள் உடைய வட்ட வடிவச் சுருள் செல்லும் மின்னோட்டம் சுருளின் மையத்தில் 0.2T மின்காந்தத் தூண்டலை தோற்றுவிக்கிறது. சுற்றுகள் அவிழ்க்கப்பட்டு பின்னர் நான்கு சுற்றுகளாக மாற்றப்படுகிறது. அதே அளவு மின்னோட்டத்திற்கு மையத்தில் தோற்றுவிக்கப்படும் காந்தத் தூண்டல் (டெஸ்லாவில்)________.  

  • A 0.8
  • B 0.4
  • C 0.2
  • D 0.6

Question - 2

1:2 விகிதத்தில் மின்னூட்டமும் சம நிறைவுமுடைய இரு அயனிகள் காந்தப்புலத்திற்கு குத்தாக முறையே 2:3 திசைவேகத்தில் செலுத்தப்படுகிறது. இரு அயனிகளும் செல்லும் வட்டப்பாதைகளின் அயனிகளும் செல்லும் வட்டப்பாதைகளின் ஆரங்களின் விகிதம்________.   

  • A 1:4
  • B 2:3
  • C 3:2
  • D 4:3

Question - 3

30A மின்னோட்டம் செல்லும் ஒரு நீண்டக் கம்பி 4 x 10-4 T மின்காந்தத் தூண்டல் உடைய வெளிப்புற காந்தப்புலத்தில் வைக்கப்படுகிறது. வெளிப்புற காந்தப்புலம் மின்னோட்டத்தின் திசைக்கு இணையாக இருந்தால் கம்பியிலிருந்து 2.0 cm தொலைவில் புள்ளியில் செயல்படும் தொகுபயன் காந்தத்தூண்டலின் அளவு (டெஸ்லாவில்)________.  

  • A 4 x 10-4
  • B 5 x 10-4
  • C 3 x 10-4
  • D 2 x  10-4

Question - 4

'a' பக்கமுடைய ஒரு சமபக்க முக்கோண வடிவச் சுருளில் I மின்னோட்டம் செல்கிறது. சுருளானது B என்று காந்தப்புலத்தில், அதன் தளம் B யின் திசையிலிருக்குமாறு வைக்கப்பட்டால் சுருளின் மீது செயல்படும் திருப்புவிசை________.   

  • A IBa 
  • B \(\frac{\sqrt3}{4}IBa^2\)
  • C \(\frac{\sqrt3}{4}IB^2a^2\)
  • D சுழி

Question - 5

மின்னோட்டம் செல்லும் 4 cm ஆரமுடைய வட்ட வடிவச் சுருளின் மையத்திலிருந்து 3 cm தொலைவில் காந்தத் தூண்டல் 50 μT. சுருளின் மையத்தில் காந்தத் தூண்டல் சுமாராக (μT-ல் )________.  

  • A 47
  • B 54
  • C 98
  • D 65

Question - 6

காற்றில் 'd' இடைவெளியில் வைக்கப்பட்ட இரு நீளமான இணை கடத்திகளின் வழியே செல்லும் மின்னோட்டங்கள் I1, மற்றும் I2 ஒன்றின் மீது மற்றொன்று தோற்றுவிக்கும் விசை F ஆகும். அவைகளில் ஒன்றின் வழியே செல்லும் மின்னோட்டம் இருமடங்காக்கப்பட்டு அதன் திசையும் மாற்றியமைக்கப்படுகிறது. கடத்திகளுக்கு இடைப்பட்ட தூரம் 3d ஆக்கப்படுகிறது. இப்போது கடத்திகளுக்கு இடையேயான விசை ________.  

  • A \(\frac{-2F}{3}\)
  • B \(\frac{F}{3}\)
  • C -2F
  • D \(\frac{-F}{3}\)

Question - 7

5 eV ஆற்றில் கொண்ட புரோட்டான் ஒன்று ஒரு சீரான காந்தப்புலத்தில் வட்டப்பாதை இயக்கத்தில் உள்ளது. அதே காந்தப்புலத்தில் அதே வட்டப்பாதையில் செல்லும் \(\alpha \) துகளின் ஆற்றில் ________.  

  • A 2 eV 
  • B 6 eV 
  • C 4 eV 
  • D 5 eV 

Question - 8

நீளமான மூன்று நேர்கடத்திகள் A, B மற்றும் C ஆகியவை படத்தில் காட்டப்பட்டுள்ளன. கடத்தி C யின் 10 cm நீளத்தால் உணரப்படும் விசை ________.  
 

  • A 1.5\(\times\)10-3N
  • B சுழி 
  • C 2.5\(\times\)10-3N 
  • D 3.2\(\times\)10-3N 

Question - 9

ஒவ்வொன்றும் 2\(\pi \) cm ஆரமுடைய இரு ஒருமைய சுருள்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் போது அவற்றின் வழியே 3A மற்றும் 4A  மின்னோட்டங்கள் செல்கின்றன. சுருள்களின் பொது மையத்தில் தோற்றுவிக்கப்படும் காந்தப்புலம் (டெஸ்லாவில்) ________.  

  • A 5\(\times \)10-5
  • B 1\(\times \)10-5
  • C 7\(\times \)10-5
  • D 3\(\times \)10-5

Question - 10

ஒரு சென்டிமீட்டர் நீளத்தில் 500 சுற்றுகள் கொண்ட ஒரு நீண்ட வரிச்சுருளில் மின்னோட்டம் I செல்கிறது. அதன் மையத்தில் காந்தப்புலம் 5.25 \(\times \) 10-2T. அதேப் பொருளாலான ஒரு சென்டி மீட்டர் நிலத்தில் 1000 சுற்றுகள் கொண்ட மற்றொரு நீண்ட வரிச்சுருளில் I/3 மின்னோட்டம் செல்கிறது. அதே மையத்தில் காந்தப்புலம் ________.  

  • A 1.5\(\times \)10-5
  • B 2.125\(\times \)10-5
  • C 3.5\(\times \)10-5
  • D 5.25\(\times \)10-5