நீட் - உயிரியல் - உயிரினங்களின் இனப்பெருக்கம்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவைகள் எவை?
(i) உயிரினங்களுகிடையே வாழ்நாள் வேறுபடுகிறது
(ii) ஒரு செல்லால் ஆன உயிரினங்களுக்கு இயற்கையான இறப்பு இல்லை
(iii) ஒரு உயிரினத்தின் வழிநாளிற்கும் அதன் அளவற்கும் தொடர்புள்ளது 

  • A (i) மற்றும் (ii) சரியானவை
  • B (i) மற்றும் (iii) சரியானவை
  • C (ii) மற்றும் (iii) சரியானவை
  • D (i) , (ii) மற்றும் (iii) சரியானவை

Question - 2

சரியான இணை எது?

  • A இரண்டாக பிளத்தள்  - ஈஸ்ட்
  • B மொட்டிடுதல் - அமீபா
  • C ஜெம்யூல்கள் - ஸ்பாஞ்சஸ் 
  • D ஸ்போர்கள்  -  பாரமீசியம்

Question - 3

அமைப்பிலும் மரபிலும் ஒத்திருக்கும்  உயிரினங்கள் அழைக்கப்படுவது

  • A குளோன்கள்
  • B உடல் இனப்பெருக்கம்
  • C ஜெம்யூல்கள்
  • D சூஸ்போர்கள்

Question - 4

சரியாக பொருத்துக.

தொகுதி I தொகுதி II
கொனிடியா (a) இலை மொட்டுகள்
ஹைடிரா (b) ஜெம்யூல்கள்
பிரையோபில்லம் (c) மொட்டுகள்
ஸ்பாஞ்சுகள் (d) பெனிசீலியம்
  • A (i) - d,(ii) - c,(iii) - a,(iv) - b
  • B (i) - c,(ii) - a,(iii) - d,(iv) -b
  • C (i) - b,(ii) - a,(iii) - d,(iv) - c
  • D (i) - b,(ii) - d,(iii) - a,(iv) - c

Question - 5

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
(i) நீர் ஹையாசிந்த (ஐக்கார்னிகா) வங்காளத்தைச் சேர்ந்தது
(ii) அவைகளால் வேகமாக உடல் இனப்பெருக்கம் செய்ய முடியும்
(iii) அவைகளால் வேகமாக இனப்பெருக்கம் செய்ய முடிவதால் நீர் நிலைகளில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கின்றன.

  • A (i) மட்டும் சரியானது
  • B (iii) மட்டும் சரியானது
  • C (ii) மட்டும் சரியானது
  • D (i) மற்றும் (iii) சரியானது

Question - 6

சரியான  கூற்று எது?

  • A எளிய அமைப்பை உடைய உயிரினங்களில் பொதுவான இனப்பெருக்க முறை பாலிலா இனப்பெருக்கமாகும்
  • B சிக்கலான அமைப்பு உள்ள உயிரினங்களில் பாலிலா  இனப்பெருக்கம் ஓர் பொதுவான இனப்பெருக்க முறையாகும்
  • C பாலினப்பெருக்கம் தான் எளிய அமைப்புடைய உயிரினங்களில்  இனப்பெருக்க முறையாகும்
  • D ஆல்காக்கள் மற்றும் பூஞ்சைகள்  சாதகமற்ற சூழ்நிலைகளில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன.

Question - 7

கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி
(i) ஆண் மற்றும் பெண் கேமிட்டுகள் வெவ்வேறு உயிரினங்களால் எதிரெதிர் பாலின உயிரினங்களால் உருவாக்கப்படுகின்றன.
(ii) ஆண் மற்றும் பெண் கேமிட்டுகளின் உயிரினங்களில் பாலினப்பெருக்கம் நடைபெற்று பெற்றோரை ஒத்த புதிய உயிரினங்கள் உருவாக்கப்படுகின்றன.
(iii) பொதுவாக பாலினப்பெருக்கம் பாலில இனப்பெருக்கத்தைவிட நீண்ட, சிக்கலான மெதுவான செயலாகும்.

  • A (i) மட்டும் சரியானது
  • B (iii) மட்டும் சரியானது
  • C (ii) மட்டும் சரியானது
  • D (i) மற்றும்  (iii) மட்டும் சரியானது 

Question - 8

சரியான கூற்றினைக் கண்டுபிடி.

  • A உயிரினங்கள் புறஅமைப்பியலிலும் செயலியலிலும் வேறுபட்டிருப்பதால் அவற்றின் பால் இனப்பெருக்கத்திலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. 
  • B உயிரினங்கள் புறஅமைப்பியலும் செயலியலிலும் வேறுபட்டிருந்தாலும் அவற்றின் பால் இனப்பெருக்கம் ஒரே மாதிரியாகக்  காணப்படுகின்றன. 
  • C பல்வேறு உயிரினங்கள் அவற்றின் புற அமைப்பியல் மற்றும் செயலியல் ஒத்துக்  காணப்படுகின்றன. இதனால் பால் இனப்பெருக்கத்திலும் ஒத்திருக்கின்றன. 
  • D பல்வேறு உயிரினங்கள் அவற்றின் புற அமைப்பியல் மற்றும் செயலியல் வேறுபாடுகளைக்  கொண்டு இருப்பதால் அவற்றின் பால் இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

Question - 9

கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலைகளின் சரியான வரிசையினை கண்டுபிடி.

  • A இளம் நிலை  ⟶  உடல நிலை ⟶  இனப்பெருக்க நிலை ⟶ இறப்பு
  • B உடல நிலை ⟶ இளம் நிலை ⟶ இனப்பெருக்க நிலை ➝ இறப்பு
  • C இளம் நிலை ⟶  இனப்பெருக்க நிலை ⟶  இறப்பு
  • D இறப்பு  ⟶ உடலநிலை ⟶  இனப்பெருக்க நிலை

Question - 10

சரியான கூற்றினைக் கண்டுபிடி.

  • A இளம்நிலை  துவங்குவது உடலநிலையின் இறுதியில் ஆகும்.
  • B அனைத்து பூக்கும் தாவரங்களும் ஒரு ஆண்டில் ஒரே ஒரு பருவத்தில் மட்டும் மலர்கின்றன.
  • C இனப்பெருக்க நிலையின் இறுதியில் இறப்புநிலை.
  • D பிளாசென்டாவைக் கொண்டுள்ள பாலூட்டிகளின் சூலகத்தின் செயல்பாட்டினை ஹார்மோன்களும் துணை நாளங்களும் கட்டுப்படுத்துகின்றன.