நீட் - உயிரியல் - இரசாயன இணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

உடற்செயலியலில் நம் உடலில் ஒருங்கிணைவை ஏற்படுத்தும் உறுப்புத் தொகுப்புகள்

  • A நரம்பு உறுப்புகள்
  • B நாளமில்லா சுரப்பிகள்
  • C நரம்பு உறுப்புகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள்
  • D இரத்தச் சுற்று உறுப்புகள்

Question - 2

நமது உடலின் வேதிய தூதுவர்கள் எனப்படுவது

  • A நொதிகள்
  • B ஹோர்மோன்கள்
  • C நரம்பு கடத்திகள்
  • D துணை நொதிகள்

Question - 3

பின்வருவனவற்றுள் எது நாளமில்லா சுரப்பி இல்லை?

  • A தைமஸ்
  • B கூம்புச்சுரப்பி
  • C இனச்செல்கள்
  • D கல்லீரல்

Question - 4

வெளிவரும் காரணிகள் மற்றும் தடைசெய்யும் காரணிகளை உருவாக்குவது எது?

  • A ஹைப்போதலாமஸ்
  • B பிட்யூட்டரி சுரப்பி
  • C ஹைப்போஃபைசிஸ்
  • D தைமஸ்

Question - 5

நரம்பு மண்டலத்திற்கும் நாளமில்லா சுரப்பிகளுக்கும் இடையில் உள்ள மத்திய பகுதி

  • A தலாமஸ்
  • B பிட்யூட்டரி சுரப்பி
  • C ஹைப்போதலாமஸ்
  • D பார்ஸ் இன்டர்மீடியா

Question - 6

அடினோ ஹைப்போமைசிஸிலுள்ள கதுப்புகள் எத்தனை?

  • A இரண்டு
  • B மூன்று
  • C நான்கு
  • D ஐந்து

Question - 7

புரோலாக்டினை உற்பத்தி செய்வது எது?

  • A பார்ஸ் டிஸ்டாலிஸ்
  • B பார்ஸ் இன்டர் மீடியா
  • C பார்ஸ் நெர்வோசா
  • D ஹைப்போதலாமஸ்

Question - 8

பார்ஸ் இன்டர்மீடியா சுரக்கும் ஹார்மோன் எது?

  • A மெலானோசைட்டுகளை தூண்டி விடும் ஹோர்மோன் (MSH)
  • B தைராய்டை தூண்டி விடும் ஹார்மோன் (TSH)
  • C ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டி விடும் ஹார்மோன் (FSH)
  • D வளர்ச்சி ஹோர்மோன் (GH)

Question - 9

பிட்யூட்டரி சுரபியின் பின்பகுதியில் சுரக்கப்படும் ஹார்மோன்(கள்)

  • A ஆக்ஸிடோசின்
  • B வாஸோப்பிரஸ்ஸின்
  • C 1 மற்றும் 2
  • D புரோலாக்டின்

Question - 10

குழந்தை பருவத்தில் வளர்ச்சி ஹோர்மோன் அதிகம் சுரக்கும் நிலைக்கு என்ன பெயர்?

  • A குள்ளத்தன்மை
  • B இராட்சத தன்மை
  • C அக்ரோமெகலி
  • D எக்சோஃப்தால்மிக் காய்டர்