நீட் - வேதியியல் - சில p-தொகுதி தனிமங்கள்

Buy நீட் தமிழ் 2022 (Starter) Practice test pack

Question - 1

டிரான்சிஸ்டர் தயாரிக்க பயன்படும் தனிமம் எது?

  • A Sn
  • B Sb
  • C Si
  • D Mg

Question - 2

ஆலம் எனப்படுவது (படிகாரம்):

  • A FeSO4(NH4)2SO4.24H2O
  • B K2SO4.Al2(SO4)3.24H2O
  • C KCl.MgCl2.6H2O
  • D NaAlO2

Question - 3

எது கார்பனின் புறவேற்றுவடிவமல்ல?

  • A கார்போரண்டம்
  • B டைமண்ட்(வைரம்)
  • C சூட்
  • D கிராபைட்

Question - 4

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படிக அமைப்பை பெறும் ஒரு பொருளின் வல்லமை இவ்வாறு அழைக்கப்படும்.

  • A ஐசோமெரிசம் (மாற்றியம்)
  • B பாலிமார்பிசம் (பல்லுருமாற்றம்)
  • C ஐசோமார்பிசம் (சம உருமாற்றம்)
  • D அமார்பிசம் (உருமாற்றமின்மை)

Question - 5

நீர்வாயுவை பெரும் முறை______.

  • A செஞ்சூட்டு கோக் படுக்கையின் வழியே நீராவியை செலுத்துதல்
  • B ஹைட்ரஜனை ஈரத்தால் தெவிட்டுதல்
  • C ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனை 1:2 என்ற விகிதத்தில் கலத்தல்
  • D பெற்றோலியச் சுத்திகரிப்பு நிலையங்களில் CO2 மற்றும் CH4 கலவையை வெப்பப்படுத்துதல்

Question - 6

கிராபைட்டில் எலக்ட்ரான்கள்______.

  • A ஒவ்வொரு மூன்றாவது கார்பன் அணுவிலும் இடம் பெறச் செய்தல்
  • B எதிர் பிணைப்பு ஆர்பிட்டாலில் உள்ளது
  • C ஒவ்வொரு கார்பன் அனுவின் மீதும் இடம் பெறச் செய்வது
  • D அமைப்பினிடையே பரவச் செய்யப்படுகின்றன

Question - 7

போராக்ஸ் மணி ஆய்வில் எந்தச்சேர்மம் உருவாகிறது?

  • A ஆர்த்தோ போரேட்
  • B மெட்டா போரேட்
  • C இரட்டை போரேட்
  • D டெட்ரா போரேட்

Question - 8

இதனை வெப்பப்படுத்துவதன் மூலம் Al2O3 ஐ AlCl3 ஆக மாற்றலாம்

  • A Al2O3 உடன் NaCl திண்ம நிலையில்
  • B Al2O3 மற்றும் கார்பன் கலவையை உலர் Cl2 வாயுவில்
  • C Cl2 வாயுவுடன் Al2O3
  • D HCl வாயுவுடன் Al2O3

Question - 9

அலுமினியம் பிரித்தெடுக்கப்படும் வணிக மின்வேதி முறையில் பயன்படுத்தப்படும் மின்பகுளி______.

  • A NaOH கரைசலில் Al(OH)3
  • B Al2(SO4)3 ன் நீரிய கரைசல்
  • C Al2O3 மற்றும் Na3AlF6ன் உருகிய கலவை
  • D AlO(OH) மற்றும் Al(OH)3 ன் உருகிய கலவை

Question - 10

ஆர்த்தோபோரிக் அமிலம்______.

  • A H2BO3--உருவாக ஒரு புரோட்டானை வழங்குகிறது 
  • B H4BO3+  உருவாக ஒரு புரோட்டானை ஏற்கிறது
  • C H2BO2+ உருவாக OH- ஐ வழங்குகிறது
  • D [B(OH)4]- உருவாக OH- ஐ ஏற்கிறது