11th Standard TM - உயிரியல் - தாவரவியல் - தாவர உலகம்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டது?

  • A டெரிடோஃபைட்கள்
  • B பிரையோஃபைட்கள்
  • C ஜிம்னோஸ்பெர்ம்கள்
  • D ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

Question - 2

டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது

  • A முன்உடலம்
  • B உடலம்
  • C கூம்பு
  • D வேர்த்தாங்கி

Question - 3

ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமடிய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை

  • A 7
  • B 14
  • C 42
  • D 28

Question - 4

ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவாவது

  • A கருவுறுதலின் போது
  • B கருவுறுதலுக்கு முன்
  • C கருவுறுதலுக்குப் பின்
  • D கரு வளரும் போது

Question - 5

எம்பிரியோஃபைட்டாதாவர பிரிவில் வகைப்படுத்த பட்டுள்ளவைகள்.

  • A ஜிம்னோஸ்பெர்மே மற்றும் ஆஞ்சியோஸ்பெர்மே
  • B டெரிடோஃபைட்டா மற்றும் டிரக்கியோஃபைட்டா
  • C பிரையோஃபைட்டா மற்றும் டிரக்கியோஃபைட்டா
  • D கிரிப்டோகேமே மற்றும் பெனரோகேமே

Question - 6

இந்த வகை வாழ்க்கை சுழற்சி உயிரிகளில் வித்தகத் தாவர நிலை (2n) ஒங்கி காணப்பட்டு ஒளிச்சேர்க்கை திறன்பெற்று சார்பின்றி வாழ்கின்றன.

  • A இரட்டைமடிய கேமீட் உயிரி
  • B ஒற்றை இரட்டை மடிய கேமீட்  உயிரி
  • C ஒற்றை மடிய கேமீட்  உயிரி
  • D இரட்டை ஒற்றை மடிய கேமீட்  உயிரி

Question - 7

பொருத்துக: பாசிகளை அதனுடைய வாழிடத்தோடு பொருத்துக.

வ.எண் பாசிகள்    வாழிடம் 
I. குளோரெல்லா  a.  மெல்லுடலிகளின் ஓடுகள் 
II. கிரிஸ்பேட்டா  b.  நிலம் 
III. டுனாலியல்லா சலைனா c. ஹைட்ராவில் அக உயிரி 
IV. வவுச்சீரியா  d. உப்பளம்  
  • A I.b,II.d,III.c,IV.a
  • B I.c,II.a,III.d,IV.b
  • C I.d,II.b,III.c,IV.a
  • D I.a,II.b,III.d,IV.c

Question - 8

இராட்சத கடல் பாசிக்கு எடுத்துக்காட்டு 

  • A யூலோத்ரிக்ஸ்
  • B ஊடோகோணியம்  
  • C கிளாமிடோமோனஸ்
  • D லாமினேரியா

Question - 9

கொடுக்கப்பட்டுள்ள பண்புகளின் அடிப்படையில் பாசிகளில் காணப்படும் அதற்குரிய நுண்ணுறுப்பைக் கண்டுபிடி.
(1) நிறமித்தாங்கிகளில் காணப்படுகிறது 
(2)இவைகள் புரதத்தால் ஆனவை
(3)தரச உற்பத்தியில் பங்குகொள்கிறது 
(4)   தரச சேமிப்பில்  பங்குகொள்கிறது

  • A பசுங்கணிகம் 
  • B உட்கரு 
  • C பைரினாய்டுகள்
  • D மைட்டோகாண்ட்ரியா  

Question - 10

தவறான ஜோடியைக் கண்டுபிடி.

  • A வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம்  1. கேரா    வட்டு வடிவம்
  • B வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம்  2. ஊடோகோனியம்  வலைப்பின்னல் வடிவம் 
  • C வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம்  3. சைக்னீமா  நட்சத்திர வடிவம்
  • D வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம்  4. யூலோத்ரிக்ஸ்  சுருள் வடிவம்