11th Standard TM - உயிரியல் - தாவரவியல் - உடலப் புறஅமைப்பியல்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

வேர்கள் என்பவை

  • A கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை
  • B கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
  • C மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை
  • D மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

Question - 2

இவை அடர்த்தியான, சதைப்பற்றுள்ள, குறிப்பிட்ட வடிவமற்ற வேர்களாகும்.

  • A முடிச்சு வேர்கள்
  • B கிழங்கு வேர்கள் 
  • C மணி வடிவ வேர்கள்
  • D தொகுப்பு வேர்கள்

Question - 3

எதிர் புவி நாட்டமுடைய வேர்களுக்கு எடுத்துக்காட்டு

  • A ஐபோமியா, டாலியா
  • B அஸ்பராகஸ், ரூயெல்லியா
  • C வைடிஸ்,போர்டுலகா
  • D அவிசீனியா, ரைசோஃபோரா

Question - 4

குர்குமா அமாடா, குர்குமாடோமஸ்டிகா, அஸ்பரேகஸ், மராண்டா – ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு

  • A கிழங்கு வேர்
  • B வளைய வேர்
  • C மணி வடிவ வேர்
  • D முடிச்சு வேர்

Question - 5

பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா – இதற்கு எடுத்துக்காட்டு

  • A இலை மொட்டு, நுனி மொட்டு
  • B இலை மொட்டு, தண்டு மொட்டு
  • C தண்டு மொட்டு, நுனி மொட்டு
  • D தண்டுமொட்டு, இலைமொட்டு

Question - 6

கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?

  • A பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன
  • B அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.
  • C நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.
  • D ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

Question - 7

தவறானா இணையைத் தேர்ந்தெடு

  • A சாஜிட்டேரியா – ஹெட்டிரோஃபில்லி
  • B லாப்லாப் – முச்சிற்றிலைஅங்கைக்கூட்டிலை
  • C பொகோனியா – இலை மொசைக்
  • D அலமாண்டா – மூவிலை அமைவு

Question - 8

காடெக்ஸ் என்பது _____ தாவரங்களாகும்.

  • A மணல் வாழ் தாவரங்கள்
  • B பாறைவாழ் தாவரங்கள்
  • C நிலத்தடி தண்டுடைய தாவரங்கள்
  • D கிளைகளற்ற மையத்தண்டுடைய தாவரங்கள்

Question - 9

மேக்னோலியோஃபைட்கள் என்பது _____ தாவரங்களாகும்.

  • A மூடுவிதைத்தாவரங்களாகும்
  • B பலகாய்ப்புத் தாவரங்களாகும்
  • C திறந்த விதைத்தாவரங்களாகும்
  • D ஒரு காய்ப்புத் தாவரங்கள்

Question - 10

பிஸ்டியா, ஐக்கோர்னிய போன்றத் தாவரங்களின் வேர்களில் _____ காணப்படுகிறது.

  • A வேர்மூடி
  • B வேர் முடிச்சுகள்
  • C வேர் தூவிகள்
  • D வேர்ப்பைகள்