11th Standard TM - உயிரியல் - T2 - தாவரவியல் - கனிம ஊட்டம்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:

1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு (i) Mo
2. சாட்டை வால் நோய் (ii) Zn
3. பழுப்பு மையக் கருக்கல் நோய் (iii) Cu
4. சிற்றிலை நோய் (iv) B
  • A 1 (iii) 2 (ii) 3 (iv) 4 (i)
  • B 1 (iii) 2 (i) 3 (iv) 4 (ii)
  • C 1 (i) 2 (iii) 3 (ii) 4 (iv)
  • D 1 (iii) 2 (iv) 3 (ii) 4 (i)

Question - 2

ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?

  • A Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
  • B Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்
  • C Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்
  • D Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்

Question - 3

மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?

  • A பாஸ்பரஸ்
  • B பொட்டாசியம்
  • C கால்சியம்
  • D நைட்ரஜன்

Question - 4

சரியானவற்றைப் பொருத்துக.

  தனிமங்கள்   பணிகள்
A மாலிப்டினம் 1 பச்சையம்
B துத்தநாகம் 2 மெத்தியோனின்
C மெக்னீசியம் 3 ஆக்சின்
D சல்ஃபர் 4 நைட்ரோஜினேஸ்
  • A A-1 B-3 C-4 D-2
  • B A-2 B-1 C-3 D-4
  • C A-4 B-3 C-1 D-2
  • D A-4 B-2 C-1 D-3

Question - 5

சரியான கூற்றைக் கண்டறிக
I. சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம்
II. N, K, S மற்றும் MO குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது.
III. லெகூம் அல்லாத தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது.
IV. நைட்ரஜன் வெளியேற்றம் செயல்படுத்தும் பாக்டீரியாக்கள் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்போபாக்டர்

  • A I, II சரி
  • B I, II, III சரி
  • C I மட்டும் சரி
  • D அனைத்தும் சரி

Question - 6

தாவர வளர்ச்சிக்கு காரணம் மண்ணிலிருந்து வேர்கள் மூலம் பெறப்படும் நைட்ரஜன் மற்றும் பிற   _______ 

  • A கனிமங்கள் 
  • B கால்சியத்தின் 
  • C குளோரின் 
  • D நிக்கல் 

Question - 7

கால்மோடுலின் என்பது  ______  அளவி மாற்றியமைக்கும் புரதம்.

  • A கனிமங்கள் 
  • B கால்சியத்தின் 
  • C குளோரின் 
  • D நிக்கல் 

Question - 8

 ____  அயனி சமநிலைக்கு உதவுகிறது.

  • A கனிமங்கள் 
  • B கால்சியத்தின் 
  • C குளோரின் 
  • D நிக்கல் 

Question - 9

____________யுரியேஸ் மற்றும் ஹைட்ரோஜினேஸ் நொதிகளின் துணை காரணியாகப் பங்கு பெறுகிறது.

  • A கனிமங்கள் 
  • B கால்சியத்தின் 
  • C குளோரின்
  • D நிக்கல் 

Question - 10

ஒரு குறிப்பிட்ட தனிமச் செறிவின் போது தாவரத்தின் உலர் எடையில்  ________ திசு இழப்பு ஏற்பட்டால் அது நச்சுத் தன்மை அளவு என கருதப்படுகிறது. 

  • A 12%
  • B 14%
  • C 8%
  • D 10%