11th Standard TM - உயிரியல் - T2 - கழிவுநீக்கம்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?

  • A பெளமானின் கிண்ணம்
  • B ஹென்லே வளைவின் நீளம்
  • C அண்மை சுருள் நுண்குழல்
  • D கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு 

Question - 2

பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில்,கீழ்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்?

  • A சிறுநீர் உருவாக்கம் நடைபெறாது
  • B உருவாக்கப்பட்ட சிறுநீரின் தரம் மற்றும் அளவில் எந்த மற்றமும் இல்லை
  • C சிறுநீர் மிகுந்த அடர்வுடையதாக இருக்கும்
  • D சிறுநீர் நீர்த்து காணப்படும்

Question - 3

நீரை மட்டும் அருந்தி நீண்ட உண்ணாவிரதத்திலுள்ள ஒருவரின் நிலை

  • A சிறுநீரில் குறைந்த அமினோ அமிலங்கள் இருத்தல்
  • B மாக்குலா டென்சா செல்கள்
  • C குறைந்த அளவு யூரியாவை கொண்ட சிறுநீர்
  • D அதிகளவு சோடியத்தை கொண்ட சிறுநீர்

Question - 4

சிறுநீர்ப்பையை சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும்போது நிகழ்வதென்ன?

  • A தொடர் சிறுநீர் வெளியேற்றம்
  • B சிறுநீர் தொடர்ந்து இயல்பாக சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படும்
  • C சிறுநீர் வெளியேற்றம்
  • D சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரிக்கப்படுவதில்லை

Question - 5

ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?

  • A கார்பன்டை ஆக்ஸைடு
  • B யூரிக் அமிலம்
  • C யூரியா
  • D அம்மோனியா

Question - 6

தவறான இணையை கண்டுபிடி

  • A பெளமானின் கிண்ணம்-கிளாமருலார்
  • B சேய்மை சுருள் நுண்குழல்-குளுக்கோஸ் உறிஞ்சப்படுத்தல்
  • C ஹென்லேயின் வளைவு-சிறுநீர் அடர்வு
  • D அண்மை  சுருள் நுண்குழல்-Na+ மற்றும் K+ அயனிகள் உறிஞ்சப்படுத்தல்

Question - 7

போடோ சைட்டுகள் காணப்படுவது

  • A பெளமானின் கிண்ண வெளிசுவரில்
  • B பெளமானின் கிண்ண உட்சுவரில்
  • C நெஃப்ரானின் கழுத்து பகுதியில்
  • D கிளாமருலார் இரத்த நுண்நாளங்களின் சுவரில்

Question - 8

கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை

  • A இரத்த செல்களும் புரதங்களும் அற்ற இரத்தம்
  • B சர்க்கரையற்ற பிளாஸ்மா
  • C புரதங்களை கொண்ட ஆனால் செல்களற்ற இரத்தம்
  • D யூரியாவற்ற இரத்தம்

Question - 9

கீழ்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்குகிறது?

  • A சிலிக்கேட்டுகள்
  • B தாது உப்புகள்
  • C கால்சியம் கார்பனேட் 
  • D கால்சியம் ஆக்சலேட்

Question - 10

சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையையுடைய உயிரிகள்

  • A யூரியா நீக்கிகள்
  • B அம்மோனியா  நீக்கிகள்
  • C யூரிக்அமில  நீக்கிகள்
  • D இரசாயன  நீக்கிகள்