11th Standard TM - உயிரியல் - T2 - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

காதிலுள்ள எப்பகுதி அழுத்த அலைகளைச் செயல்நிலை மின்னழுத்தமாக மாற்றுகிறது?  

  • A செவிப்பறை சவ்வு  
  • B கார்ட்டை உறுப்பு 
  • C நீள் வட்டப் பலகணி(oval window) 
  • D அரைவட்டக் குழல்கள் 

Question - 2

கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு 

  • A உணர்வு நரம்பு - உட்செல்லுதல் 
  • B இயக்க நரம்பு - உட்செல்லுதல் 
  • C உணர்வு நரம்பு - வயிற்றுப்புறம் 
  • D இயக்க நரம்பு - முதுகுப்புறம்.  

Question - 3

நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் (Neurotransmitter) (P) அயனிகளின் (Q) செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன.சரியான விடையைத் தேர்ந்தெடு.     

  • A P=அசிட்டைல் கோலைன் Q=Ca++   
  • B P=அசிட்டைல் கோலைன் Q=Na+   
  • C P=GABA Q=Na+   
  • D P=கோலைன்எஸ்ட்ரேஸ் Q=Ca++     

Question - 4

A,B என்ற இரு செல் வகைகளில் படங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

  • A செல் A என்பது குச்சி செல்.இது விழித்திரையின் அனைத்துப் பகுதியிலும் காணப்படுகிறது.   
  • B செல் A  என்பது கூம்புசெல் இது ஃபோவியாவின் (மஞ்சள் தானத்தின்) மையப்பகுதியில் செறிவாக உள்ளது.    
  • C செல் A யானது செறிவான ஒளியில் நிறப்பார்வையுடன் தொடர்புடையது.  
  • D செல் A யானது செறிவான ஒளியை உணரக்கூடியது. 

Question - 5

மனித மூளையின் எப்பகுதி உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது? 

  • A சிறுமூளை 
  • B பெருமூளை 
  • C முகுளம் 
  • D ஹைப்போதலாமஸ்    

Question - 6

சுவாச மையம் காணப்படுமிடம் 

  • A முகுளம் 
  • B ஹைப்போதலாமஸ் 
  • C சிறுமூளை 
  • D தலாமஸ் 

Question - 7

கீழ்க்கண்டவற்றுள் தொகுதி I ல் கொடுக்கப்பட்டுள்ள தண்டு வட நரம்புகளையும் தொகுதி II ல் கொடுக்கப்பட்டுள்ள தகுந்த எண்ணிக்கையையும் பொருத்துக.

P. கழுத்துப் பகுதி நரம்புகள்  i 5 இணை
Q.  மார்புப்பகுதி நரம்புகள்  ii.  1 இணை 
R.  இடுப்புப்பகுதி நரம்புகள்  iii.  12 இணை 
S.  வால் பகுதி நரம்புகள்  iv.  8 இணை 
  • A P-IV Q-III R-I  S-ii     
  • B P-III Q-I  R-II  S-iv      
  • C P-IV Q-I  R-II  S-iii       
  • D P-II Q-IV  R-I  S-iii       

Question - 8

கீழ்க்கண்டவற்றுள் கண் கோள அசைவினைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்பு எது? 

  • A ட்ரோகிளியார் நரம்பு    
  • B பார்வை நரம்பு 
  • C நுகர்ச்சி நரம்பு 
  • D வேகஸ் நரம்பு 

Question - 9

செல்லுக்குள் அதிகளவில் காணப்படும் நேர்மின் அயனி எது? 

  • A H+ 
  • B K+ 
  • C Na+ 
  • D Ca++ 

Question - 10

கீழ்க்கண்ட நரம்புத்தூண்டல் தொடர்பான கூற்றுகளில் தவறானது எது? 

  • A ஓய்வுநிலை நியூரானில் ஆக்ஸான் படலம் K+ அயனிகளை அதிகம் ஊடுருவ விடுகின்றது.Na+ அயனிகளை ஊடுருவ விடுவதில்லை    
  • B ஓய்வுநிலை நியூரானில் உள்ள ஆக்ஸானின் வெளிப்புறத்தில் Na+ அயனிகளின் செறிவு அதிகமாகவும் K+ அயனிகளின் செறிவு குறைவாகவும் உள்ளது.     
  • C ஓய்வு நிலையிலுள்ள ஆக்ஸான் படலங்களுக்கிடையே Na+ மற்றும் K+ உந்தம் மூலம் அயனிகளின் வேறுபாடு பராமரிக்கப்படுகிறது.இது வெளியேறும் 3Na+ அயனிகளுக்கு பதிலாக 2k+ அயனிகளை செல்லுக்குள் அனுமதிக்கிறது.     
  • D ஆக்ஸான் படலத்தின் வெளிப்பரப்பு எதிர்மின் தன்மையுடனும் உட்பரப்பு நேர்மின் தன்மையுடனும் இருக்கும் போது மட்டுமே ஒரு நியூரான் மின் முனைப்பியக்கத்தைப் பெறும்.