11th Standard TM - உயிரியல் - T2 - தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

கீழ்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க.
வசந்தகாலத்தில் கேம்பியம்
(i) குறைவான செயல்பாடு கொண்டது.
(ii) அதிகப்படியான சைலக்கூறுகளை தோற்றுவிக்கின்றன.
(iii) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது.

  • A (i) சரியானது ஆனால் (ii) & (iii) சரியானவையல்ல
  • B (i) சரியானதல்ல ஆனால் (ii) & (iii) சரியானவை
  • C (i) & (ii) சரியானவை ஆனால் (iii) சரியானதல்ல
  • D (i) & (ii) சரியானவையல்ல ஆனால் (iii) சரியானது

Question - 2

வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பதில்லை. ஏனென்றால்

  • A செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டுள்ளது.
  • B செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டிருப்பதில்லை
  • C கேம்பியத்தின் செயல்பாடு தடை செய்யப்படுகிறது
  • D அனைத்தும் சரியானவை

Question - 3

பட்டைத்துளை படத்தில் குறிப்பிட்டுள்ள பாகங்கள் அ, ஆ, இ, ஈ-யை கண்டறிக.

  • A (அ) ஃபெல்லம் (ஆ) நிரப்பிச்செல்கள் (இ) ஃபெல்லோடெர்ம் (ஈ) ஃபெல்லோஜென்
  • B (அ) நிரப்பிச்செல்கள் (ஆ) ஃபெல்லம் (இ) ஃபெல்லோஜென் (ஈ) ஃபெல்லோடெர்ம்
  • C (அ) ஃபெல்லோஜென் (ஆ) ஃபெல்லம் (இ) ஃபெல்லோடெர்ம் (ஈ) நிரப்பிச்செல்கள்
  • D (அ) ஃபெல்லோடெர்ம் (ஆ) ஃபெல்லம் (இ) நிரப்பிச்செல்கள் (ஈ) ஃபெல்லோஜென்

Question - 4

முதிர்ந்த தண்டின் மையப் பகுதியில் இரண்டாம் நிலை சைலமானது அடர் மற்றும் கடினமான அமைப்பைக் கொண்ட நீர் கடத்தாப் பகுதி

  • A அல்பர்னம்
  • B பாஸ்ட்
  • C கட்டை
  • D டியூரமென்

Question - 5

வழக்கமாகக் குப்பி தக்கை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

  • A டெர்மடோஜென்
  • B ஃபெல்லோஜென்
  • C சைலம்
  • D வாஸ்குலக் கேம்பியம்

Question - 6

இருவிதையிலை தாவர வேரின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சி வெளிபாட்டில் முதல் நிலை சைலம்

  • A மையப் பகுதியில் நிலைத்து நிற்கிறது.
  • B நசுக்கப்படும்
  • C நசுக்கப்படலாம் அல்லது நசுக்கப்படாமல் இருக்கலாம்.
  • D முதல் நிலை ஃபுளோயத்தை சுற்றிக் காணலாம்

Question - 7

கூற்று-கட்டைத்தன்மையுடைய தண்டுகளில் ஆண்டுக்காண்டு வைரக்கட்டையின் அளவு அதிகரிக்கிறது.
காரணம்- கேம்பிய வளையத்தின் செயல்பாடு தடையில்லாமல் தொடர்கிறது.

  • A கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
  • B கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.
  • C கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
  • D கூற்று, காரணம் இரண்டும் தவறு

Question - 8

கூற்று-இருவிதையிலை தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சியானது வாஸ்குலக் கேம்பியம், ஃபெல்லோஜெனால் நடைபெறுகிறது.
காரணம்-வாஸ்குலக் கேம்பியம் முழுவதும் முதல் நிலை தோற்றமாகும்.

  • A கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
  • B கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.
  • C கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
  • D கூற்று, காரணம் இரண்டும் தவறு

Question - 9

பொதுவாக இருவிதையிலைத் தாவரக் கட்டைகள் வெசல்களைக் கொண்டுள்ளதால் இவை துளைக் கட்டை அல்லது  -----------------  என்று அழைக்கப்படுகிறது.

  • A வன்கட்டை 
  • B மென்கட்டை
  • C மரவயதியல் 
  • D பரவலான துளைக்கட்டை 

Question - 10

பெரும்பாலும் ஜிம்னோஸ்பெர்ம் கட்டைகளில் வெசல்கள் காணப்படுவதில்லை எனவே இது துளைகற்ற கட்டை அல்லது -------------- என அழைக்கப்படுகிறது. 

  • A வன்கட்டை 
  • B மென்கட்டை 
  • C மரவயதியல் 
  • D பரவலான துளைக்கட்டை