11th Standard TM - உயிரியல் - T2 - வேதிய ஒருங்கிணைப்பு

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.   

  • A ஒழுங்குப்படுத்துதல் 
  • B உடல் சமநிலை பேணுதல் 
  • C ஒருங்கிணைப்பு 
  • D ஹார்மோன்களின் கட்டுப்பாடு 

Question - 2

கீழே தரப்பட்டுள்ள இணையில் எது முழுமையான நாளமில்லாச் சுரப்பி இணையாகும்?  

  • A தைமஸ் மற்றும் விந்தகம் 
  • B அட்ரினல் மற்றும் அண்டகம் 
  • C பாராதைராய்டு மற்றும் அட்ரினல்   
  • D கணையம் மற்றும் பாராதைராய்டு  

Question - 3

கீழ் வருவனவற்றுள் எந்த ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியின் தாக்கத்தினால் சுரப்பது இல்லை.   

  • A தைராக்ஸின்   
  • B இன்சுலின் 
  • C ஈஸ்ட்ரோஜன்    
  • D குளுக்கோகார்டிகாய்டுகள்     

Question - 4

மனித விந்தகத்தில் விந்தணுவாக்கம் எதனால் கட்டுப்படுத்தப்படுகின்றது? 

  • A லூட்டினைசிங் ஹார்மோன்       
  • B ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன்   
  • C ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன் மற்றும் புரோலாக்டின்   
  • D வளர்ச்சி ஹார்மோன் மற்றும் புரோலாக்டின்  

Question - 5

இரத்தச் சீரத்தில் கால்சியம் அளவை நெறிப்படுத்துவது 

  • A தைராக்ஸின்   
  • B FSH 
  • C கணையம் 
  • D தைராய்டு மற்றும் பாராதைராய்டு 

Question - 6

அயோடின் கலந்த உப்பு இதனைத் தடுத்தலில் முக்கியப்பங்காற்றுகிறது.  

  • A ரிக்கெட்ஸ்  
  • B ஸ்கர்வி 
  • C காய்டர்  
  • D அக்ரோமெகாலி    

Question - 7

நோய்த்தடைக்காப்புடன் தொடர்புடைய சுரப்பி எது?   

  • A பீனியல் சுரப்பி  
  • B அட்ரினல் சுரப்பி 
  • C தைமஸ் சுரப்பி 
  • D பாராதைராய்டு சுரப்பி 

Question - 8

கீழ்வரும் இனவுறுப்பு ஹார்மோன்கள் பற்றிய கூற்றுகளில் சரியானதைக் குறிப்பிடவும், 

  • A LH துண்டுதலால் லீடிக் செல்கள் டேஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்கின்றன.     
  • B கர்ப்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும் புரோஜெஸ்டிரோன் குழந்தை பிறப்பின் போது பின் இடுப்புத் தசைநாண்களை மென்மையாக்குகின்றது.  
  • C செர்டோலி செல்கள் மற்றும் கார்ப்பஸ் லூட்டியம் ஆகியவை புரோஜெஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன.    
  • D உயிரியல் அடிப்படையில் கார்பஸ் லூட்டியம் உருவாக்கும் புரேஜெஸ்ரோனும் தாய்சேய் இணைப்புப்படலம் உருவாக்கும் புரோஜேஸ்டிரோனும் மாறுபடுகின்றது.     

Question - 9

வளர்ச்சி ஹார்மோன் மிகை சுரப்பால் குழந்தைகளுக்குத் தோன்றுவது. 

  • A கிரிடினிசம்  
  • B இராட்சத்தன்மை   
  • C கிரேவின் நோய் 
  • D டெட்டனி 

Question - 10

ஒரு கருவுற்ற பெண் குழந்தையை பெற்றுள்ளார்.அக்குழந்தை குட்டையான வளர்ச்சி,மூளைவளர்ச்சி குறைபாடு, குறைந்த அறிவாற்றல் திறன், இயல்புக்கு மாறான தோல் ஆகிய அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணம்.       

  • A குறைந்த அளவு வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு 
  • B தைராய்டு சுரப்பியில் புற்று நோய் 
  • C பார்ஸ் டிஸ்டாலில் மிகைசுரப்பு     
  • D உணவில் அயோடின் பற்றாக்குறை