11th Standard TM - உயிரியல் - T2 - வணிக விலங்கியலின் போக்குகள்

Buy 11th உயிரியல் MCQ Online Test Practice test pack

Question - 1

கீழ் வருவனவற்றுள் மண்புழு உர உற்பத்தியில் தொடர்பற்றது எது? 
அ) மண் வளத்தைப் பாதுகாத்தல் 
ஆ) கனிமப் பொருட்களை சிதைத்தல் 
இ) துளைகள், காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்தல் தன்மை போன்றவற்றை அளிக்கின்றது.  
ஈ) உயிரியல் சிதைவுக்குட்படாத கரிமங்களை சிதைக்கின்றது. 

  • A அ மற்றும் ஆ சரி  
  • B இ மற்றும் ஈ சரி  
  • C ஆ மற்றும் ஈ தவறு 
  • D அ மற்றும் இ தவறு 

Question - 2

கீழ் வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல. 

  • A பெரியோனிக்ஸ்   
  • B லேம்பிட்டோ   
  • C யூட்ரிலஸ்   
  • D ஆக்டோ கீடோனா   

Question - 3

கீழ்வருவனவற்றைப் பொருத்துக.   
1. பாம்பிக்ஸ் மோரி 
அ) சாம்பா  i) முகா 
2.ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ் 
ஆ) மல்பெரி   ii) எரி 
3.ஆந்ரேயா மைலிட்டா 
இ) அர்ஜுன்  iii) டஸ்ஸார் 
4.அட்டாகஸ் ரிசினி 
ஈ) ஆமணக்கு  iv) மல்பெரி 
சரியான ஒன்றை தேர்ந்தெடு              

  • A 1-ஆ-iv  
  • B 2-அ-i  
  • C 3-இ-iii 
  • D 4-ஈ-ii  

Question - 4

ஏரிபட்டு ______ லிருந்து பெறப்படுகின்றது.  

  • A லேஸ்ஸிஃபெர் லேக்கா     
  • B நொசிமா பாம்பிசிஸ்  
  • C அட்டாகஸ்  ரிசினி 
  • D அட்டாகஸ் மைலிட்டா  

Question - 5

தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 

  • A செரிகல்சர்  
  • B லேக் கல்சர்  
  • C வெர்மிகல்சர்   
  • D ஏபிகல்சர்  

Question - 6

அரக்குப் பூச்சியைப் பற்றிய கூற்றுகளில் எது தவறு?  

  • A நுண்ணிய , ஒட்டும் தன்மையுள்ள,ஊர்ந்து செல்லும் செதில்களுடைய பூச்சி 
  • B தன்னுடைய உறிஞ்சுகுழலை தாவரத்திசுவினுள் நுழைந்து சாற்றை உறிஞ்சி வளர்கின்றன.  
  • C அரக்கை தன் உடலின் பின் பகுதியில் இருந்து சுரக்கின்றது. 
  • D ஆண் அரக்குப் பூச்சி அதிக அளவில் அரக்கு உற்பத்திக்குக் காரணமாகிறது.  

Question - 7

அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது ________     

  • A மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும். 
  • B நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும். 
  • C மண்புழு வளர்ப்பும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்தது. 
  • D இறால் வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்ததாகும். 

Question - 8

இறால் சார்ந்துள்ள வகை 

  • A கிரஸ்டேஷியா    
  • B அன்னலிடா 
  • C ஸ்கேபபோடா     
  • D பெலிசிபோடா   

Question - 9

முத்துச் சிப்பி சார்ந்த வகை 

  • A கேஸ்ட்ரோபோடா    
  • B செபலோபோடா     
  • C ஸ்கேபபோடா     
  • D பெலிசிபோடா     

Question - 10

உள்நாட்டு மீன்வளர்ப்பு என்பது 

  • A ஆழ்கடலில் மீன்பிடித்தல் 
  • B கடற்கரை ஓர மீன்பிடித்தல் 
  • C நன்னீரில் மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல்   
  • D மீனிலிருந்து மீன் எண்ணெய் பிரித்தெடுத்தல்