நீட் - இயற்பியல் - நியூட்டனின் இயக்க விதிகள்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

150 ms-1 வேகத்தில் செல்லும் 50கி நீரையுடைய குண்டு (bullet) ஒன்று மரக்கட்டை  ஒன்றை 10 செ.மீ  ஆழத்திற்கு துளைத்து செல்கிறது. குண்டை நிறுத்துவதற்கு தேவையான சராசரி விசை _______.

  • A 5.625 x 103 N 
  • B 4.275 x 103 N 
  • C 2.525 x 103 N 
  • D 3.725 x 103 N 

Question - 2

நிறையற்ற இலகுவான கயிற்றில் தொங்கவிடப்பட்டுள்ள  நிறை ஒன்று 2ms-2 என்ற முடுக்கத்தில் மேல்நோக்கியும் பின்னர் 2ms-2 என்ற முடுக்கத்தில் கீழ் நோக்கியும் நகர்த்தப்படுகிறது. இரு நிலைகளிலும் கயிற்றில் உருவாகிய இழுவிசைகளின் (tensions) விகிதம் (g = 10ms-2) _______.

  • A 2:1
  • B 1:2
  • C 2:3
  • D 3:2

Question - 3

மின் உயர்த்தி (lift) ஒன்று 4.9ms-2 என்ற முடுக்கத்தில் கீழ் நோக்கி நகருகிறது. மின் உயர்த்தியினுள் உள்ள மனிதனின் தோற்ற எடை மாற்றத்தின் சதவீதம் _______.

  • A 75%
  • B 50%
  • C 25%
  • D 12.5%

Question - 4

V என்ற மாறாத திசைவேகத்தில் வினாடிக்கு M kg  இரத்தத்தை மேலேற்றும் இதயத்திற்கு தேவைப்படும் விசை _______.

  • A M/V
  • B MV2
  • C M2V
  • D MV

Question - 5

ஒவ்வொன்றும் 2N அளவுள்ள இரு விசைகள் 2kg நீரையுடைய பொருளின் மீது அவற்றுக்கிடையே 600 கோணம் அமைந்தவாறு செயல்படுகிறது. பொருள் அடையும் நிகர முடுக்கம் _______.

  • A √3ms-2
  • B 2√3ms-2
  • C 5√3ms-2
  • D 3√3ms-2

Question - 6

'm' நீரையுடைய பொருள் ஒன்று கிடைத்தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. உராய்வுக் கோணம் θ எனில், பொருளை கிடைத்தளத்தில் நகர்த்த தேவைப்படும் மிகக் குறைந்த விசை (g = புவிஈர்ப்பு முடுக்கம்) _______.

  • A mg sin θ
  • B mg cos θ
  • C mg tan θ
  • D mg sec θ

Question - 7

140g நீரையுடைய கிரிக்கெட் பந்து ஒன்று 10ms-1 என்ற திசைவேகத்தில் சென்று கிரிக்கெட் மட்டையில் பட்டு 18ms-1 என்ற திசைவேகத்தில் திரும்பி வருகிறது. பந்தின் மீது செயல்படும் விசை 0.01s நேரத்திற்கு மட்டுமே செயல்பட்டால் மட்டையால் பந்தின் மீது செயல்படுத்தப்பட்ட விசை _______.

  • A 480N
  • B 392N
  • C 285N
  • D 175N

Question - 8

வெற்றிடத்தில் 15kg  நீரையுடைய பொருள் ஒன்று 5ms-1 என்ற முடுக்கத்துடன் செங்குத்தாக கீழ் நோக்கி வருகிறது. பொருளின் மீது செயல்படுத்தப்பட்ட விசை _______.

  • A 52N
  • B 65N
  • C 45N
  • D 72N

Question - 9

ஒவ்வொன்று 1g  நீரையுடைய குண்டுகள் 10ms-1 என்ற திசைவேகத்துடன் துப்பாக்கி ஒன்றிலிருந்து வெளிவருகிறது. துப்பாக்கி, குண்டுகளின் மீது செலுத்திய விசையின் அளவு 5g எடைக்குச் சமம். ஒரு வினாடிக்கு வெளிவரும் குண்டுகளின் எண்ணிக்கை (g = 10ms-1) _______.

  • A 5
  • B 10
  • C 50
  • D 25

Question - 10

கயிறு ஒன்றில் மணல் நிரப்பட்ட பை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது மணல் பையின் நிறை 'm' அப்பையை நோக்கி \(\left (m \over 20\right )\) நிறை கொண்ட குண்டு ஒன்று v என்ற திசைவேகத்தில் இயங்கி பையினுள் உட்புகுந்து கொள்கிறது. மணற்பை அடையும் இறுதித் திசைவேகம் _______.

  • A 21v/20
  • B v/21
  • C v/20
  • D \({20\over 21}v \)