நீட் - இயற்பியல் - பருப்பொருட்களின் பண்புகள்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

சீரான, படித்தர 200 வளிமண்டல அழுத்தத்தில் கோளவடிவ பந்தின் பருமன் 1% சுருங்குகிறது. பொருளின் அமுக்கக் குணகம் (1வளி மண்டல அழுத்தம் = 105 Nm-2)  ________.

  • A 20 x 10-10 N-1m 2 
  • B 5 x 10-10N-1m2
  • C 10-10N-1m2 
  • D 2 x 10-10N-1m2

Question - 2

இழுவிசையின் காரணமாக உலோகக் கம்பி ஒன்று 1மீ லிருந்து 1.01m ஆக நீட்சி அடைகிறது. மேலும் 5N விசை கொடுக்கப்பட்ட போது அதன் நீளம் 1.03m ஆகிறது. தொடக்கத்தில் செலுத்தபட்ட இழுவிசை________.

  • A 5N 
  • B 2.5N 
  • C 7.5N 
  • D 3N 

Question - 3

A குறுக்கு வெட்டுப் பரப்பும் 2l நீளமும் கொண்ட கம்பி AB என்ற முனைகளுக்கு இடையே இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. கம்பியானது ACB என்ற வடிவத்தைப் பெறுமாறு (படம்) இழுக்கப்படும் போது கம்பிப் பொருளின் யங்குனகம் Y அடிப்படையில் கம்பியில் செயல்படும் இழுவிசை (d <<2l ) எனக் கருதுக.
 

  • A \(Y\frac { { d }^{ 2 } }{ { 2l }^{ 2 } } \)
  • B \(YA\frac { { 2l }^{ 2 } }{ { d }^{ 2 } } \)
  • C \(Y\frac { { 2l }^{ 2 } }{ { d }^{ 2 } } \)
  • D \(Y\frac { { Ad }^{ 2 } }{ { 2l }^{ 2 } } \)

Question - 4

A, B, மற்றும் C என்பன முறையே 1m, 1.5m, மற்றும் 2m நீளமுடையதும் ஒரே குறுக்கு வெட்டுப் பரப்பும் கொண்டதுமான வெவ்வேறு கம்பிபொருள். அவற்றில் ஒரே அளவான இழுவிசை கொடுக்கப்பட்ட போது அவற்றின் நீளங்களில் ஏற்பட்ட நீட்சிகள் முறையே 2cm, 1.5cm, மற்றும் 3cm ________.

  • A A யின் மீட்சிப்பண்பு B ஐக் காட்டிலும் அதிகம்.
  • B C யின் மீட்சிப்பண்பு B ஐக் காட்டிலும் அதிகம்.
  • C B யின் மீட்சிப்பண்பு A ஐக் காட்டிலும் அதிகம்.
  • D A யின் மீட்சிப்பண்பு C ஐக் காட்டிலும் அதிகம்.

Question - 5

சீரான தண்டின் ஒரு முனையில் பழு ஏற்றப்படுவதால் அது அடையும் நெடுக்கத்திரிபு 3 x 10-3m எனில் அதன் கன அளவில் ஏற்படும் சதவீ த உயர்வு (பாய்ஸான் விகிதம் = 0.4)________.

  • A 0.6%
  • B 0.3%
  • C 0.06%
  • D 0.03%

Question - 6

5 cm2 குறுக்கு வெட்டுப் பரப்பு கொண்ட ஒரு மின் உயர்த்தி கம்பி வடத்தின் (cable ) மீட்சி எல்லை 6 x 108 Nm-2 மின்உயர்த்தி 40 ms-2 மேல் நோக்கிய முடுக்கத்துடன் செல்லும் போது கம்பி வடம் தாங்கக்கூடிய பெரும தகைவு, மீட்சி எல்லை மதிப்பில் மூன்றுக்கு ஒன்று மேற்படாதவாறு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மின் உயர்த்தியில் இருக்க வேண்டிய பெரும நிறை என்ன? (g = 10 ms-2)

  • A 2000 kg 
  • B 600 kg 
  • C 300 kg 
  • D 6000 kg 

Question - 7

சீரற்ற குறுக்கு வெட்டுப் பரப்பு கொண்ட, கிடைத்தளத்தில் அமைந்த குழாய் ஒன்றின் வழியே நீர் சீராக செல்கிறது. குழாயின் குறுக்கு வெட்டுப் பரப்பு 0.04m2 கொண்ட புள்ளியில் நீரின் அழுத்தம் 2 x 104 Nm-2 மற்றும் நீரின் வேகம் 1 ms-1 கொண்ட புள்ளியில் முறையே நீரின் வேகம் மற்றும் அழுத்தம்________.

  • A 0.25 ms-1 , 2.5 x  104 Nm-2 
  • B 1.25 ms-1, 1.5 x 104 Nm-2
  • C 4 ms-1, 1.25 x  104 N m-2
  • D 2 ms-1, 1.5 x 104 N m-2 

Question - 8

1500 kgm-3 அடர்த்தி கொண்ட கரைசலில் 4mm விட்டம் கொண்ட காற்றுக் குமிழ் 30 cms-1 என்ற வேகத்தில் மேலெழும்புகிறது. கரைசலின் பாகியல் எண் (காற்றின் அடர்த்தியை புறக்கணிக்கவும்) (g = 10 ms-2) என்க.

  • A 3.3 x 10-3 poise 
  • B 2.2 x 10-3 poise 
  • C 1.1 x 10-3 poise 
  • D 4.4 x 10-3 poise 

Question - 9

R ஆரமும் \(\frac { \rho }{ 3 } \) அடர்த்தியும் கொண்ட கோளப்பந்து ஒன்று \(\rho \) அடர்த்தி கொண்ட திரவத்தினுள் விடப்படும் பொழுது அது 2 cms-1 என்ற முற்றுத் திசைவேகத்தை அடைகிறது. அதே திரவத்தினுள் 2R ஆரமும் அடர்த்தியும் கொண்ட மற்றொரு கோளப்பந்து விடப்பட்டால் அது அடையும் முற்றுத் திசைவேகம்________.

  • A 6 cms-1
  • B 14 cms-1
  • C 7 cms-1
  • D 9 cms-1

Question - 10

0.5mm விட்டமுடையை கண்ணாடித் துண்டு ஒன்று 1.5mm விட்டமுடைய நுண்புழைக் குழாயினுள் சமசீராக செலுத்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பை நீரினுள் செங்குத்தாக செலுத்தினால், நீரானது நுண்புழைக் குழாயினுள் 'h' உயரம் ஏறுகிறது. நீரின் பரப்பு இழுவிசை 70 x 10-3 Nm-1 எனில் h ன் மதிப்பு________.  

  • A 1.43 cm 
  • B 3.95 cm
  • C 2.85 cm
  • D 5.7 cm