நீட் - இயற்பியல் - வெப்ப இயக்கவியல்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

ஒரு நல்லியல்பு  வெப்ப இயந்திரம், 5000K  வெப்பநிலையில் வெப்பம் பெறும் பொழுது அதன் இயக்குத்திறன் 40% அதே வெளியேற்று வெப்பநிலைக்கு இயந்திரத்தின் இயக்குத்திறன் 50%, எனில் இயந்திரம் எந்த வெப்பநிலையிலிருந்து  வெப்பத்தை பெற இயலும்?

  • A 600K 
  • B 700K 
  • C 800K 
  • D 900K 

Question - 2

ஒரு வெப்ப மாற்றீடற்ற நிகழ்விற்கு, ஓரணு  வாயுவின் அழுத்தம் மற்றும் வெப்பநிலைகளுக்கு இடையேயான தொடர்பு , \(P\ \alpha \ { T }^{ c }\) இதில் C என்பது எதற்கு சமம் ?

  • A \(\frac { 2 }{ 5 } \)
  • B \(\frac { 5 }{ 2 } \)
  • C \(\frac { 3 }{ 5 } \)
  • D \(\frac { 5 }{ 3 } \)

Question - 3

1 லிட்டர் கொள்ளளவு  கொள்ளக்கூடிய கலன் ஒன்றினுள் அதன் வெப்பநிலை மாறாநிலையில் 1 வளிமண்டல அழுத்தத்துடன் 2 லிட்டர் O2 வாயுவும் 0.5 வளிமண்டல அழுத்தத்துடன் 2 லிட்டர் N2 வாயுவும்  செலுத்தப்படுகிறது. கலனில் மொத்த அழுத்தம்________. (வளிமண்டல அழுத்தத்தில் )

  • A 1.5
  • B 1
  • C 0.5
  • D 2

Question - 4

20 Nm-2 என்ற மாறா அழுத்தத்தில் வாவு  ஒன்று விரிவடைந்து அதன் பருமன் 6mலிருந்து 10m3 ஆக மாறுகிறது. பின்னர் 10mஎன்ற மாறா பருமனில் வாயுவின் அழுத்தம் 20Nm-2 க்கு லிருந்து 30Nm-2 க்கு அதிகரிக்கிறது. வாயுவினால் செய்யபப்ட்ட வேலை________.

  • A 20 J 
  • B 40 J 
  • C 80 J
  • D 30 J

Question - 5

மாறா அழுத்தத்தில் ஒரு மோல் நல்லியல்பு வாயுவின் வெப்பநிலையை 20K உயர்த்த தேவையான வெப்பம் 207J . மாறா பருமனில் அதே அளவு வெப்பநிலையை உயர்த்த தேவையான வெப்பம்________.(வாயு மாறிலி R = 8.3 J mol-1 K -1

  • A 41 J
  • B 124 J
  • C 207 J
  • D 20 J

Question - 6

குளிர்பதனி ஒன்று காய்கறிகளை கெடாமல் வைத்திருக்க அதனுள் 100C வெப்பநிலை இருக்குமாறு செயல்படுகிறது. அறை வெப்பநிலை 360C எனில் செயல்திறன் எண் ________. 

  • A 10.9
  • B 9.1
  • C 19
  • D 1.09

Question - 7

ஒரு கார்னாட் இயந்திரத்தின் வெப்ப ஏற்பியின் வெப்பநிலை 290K  எனும் போது அதன் இயக்குதிறன் 30%. ஏற்பியின்வெப்பநிலையை மாற்றாமல் இயந்திரத்தின் இயக்குதிறனை 50% க்கு கொண்டுவர வெப்பமூலத்தின் வெப்பநிலையை உயர்த்த வேண்டிய அளவு ________.

  • A 165.7 K 
  • B 56.7 K
  • C 90 K
  • D 190 K

Question - 8

கீழ்கண்ட எந்த நிலைகளில் கார்னாட் இயந்திரம் அதிக இயக்குதிறன் கொண்டதாக இருக்கும்?

  • A 300 K மற்றும் 250 K வெப்ப நிலைகளுக்கு இடையில் 
  • B 600  K மற்றும் 300 K வெப்ப நிலைகளுக்கு இடையில் 
  • C 100 K மற்றும் 10 K வெப்ப நிலைகளுக்கு இடையில் 
  • D 800 K மற்றும் 400 K வெப்ப நிலைகளுக்கு இடையில் 

Question - 9

ஒரு கார்னாட் இயந்திரம் 2000C  மற்றும் 00C வெப்ப நிலைகளுக்கு இடையிலும் மற்றொரு கார்னாட் இயந்திரம் 00C  மற்றும் -2000C வெப்பநிலைகளுக்கு இடையிலும் செயல்படுகிறது. அவைகளின் இயக்குதிறன்களின் விகிதம் \(\left( \frac { { \eta }_{ 1 } }{ { \eta }_{ 2 } } \right) \) என்பது  ________.​​​​​​​​​​​​​​

  • A 0.577
  • B 1.36
  • C 2
  • D 2.5

Question - 10

வெப்ப இயந்திரம் ஒன்று 5 g /s  என்ற வீதத்தில் எரிபொருளை பயன்படுத்துகிறது. எரிபொருளின் வெப்ப(calorie) மதிப்பு 100 cal/g . வெப்ப மூலம் மற்றும் வெப்ப ஏற்பி ஆகியவைகளின் வெப்பநிலை முறையே 1270C மற்றும் 270C. இயந்திரத்தின் வெளியீடுதிறன்________. 

  • A 625 W 
  • B 525 W
  • C 425 W
  • D 125 W