நீட் - வேதியியல் - தனிமங்களின் வகைப்பாடும் ஆவர்த்தன பண்புகளும்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

கீழ்க்கண்டவற்றில் எது டோபரீனரின் மும்மை அல்ல?

  • A Li, Na, K
  • B Be, Mg, Ca
  • C Ca, Sr, Ba
  • D Cl, Br, I

Question - 2

கண்டுபிடிக்கப்பட்ட அணு எண்கள் 114 மற்றும் 116 உடைய புதிய தனிமங்கள் வைக்கப்பட வேண்டிய இடம்_______.

  • A s - தொகுதி
  • B p - தொகுதி
  • C d - தொகுதி
  • D f -தொகுதி

Question - 3

முக்கிய தொகுதி தனிமங்கள் இவையடங்கியது ஆகும்.

  • A s - மற்றும் p - தொகுதி
  • B p - மற்றும் d - தொகுதி
  • C s - மற்றும் d - தொகுதி
  • D d - மற்றும் f - தொகுதி

Question - 4

சால்கோஜன்கள் இதன் தனிமங்கள்_______.

  • A தொகுதி 16
  • B p - தொகுதி
  • C ns2np4 அமைப்புடையவை
  • D மேற்கண்ட அனைத்தும்

Question - 5

இடைநிலைத் தனிமங்கள் பெற்றிராத பண்பை தெரிந்தெடு:

  • A மாறுபடும் இணைதிறன்களை காண்பிக்கின்றன.
  • B சுடருக்கு நிறத்தை அளிக்கிறது
  • C பாரா காந்தத் தன்மையுடையவை
  • D வினைவேக மாற்றிகளாகச் செயல்படுகின்றன.

Question - 6

தனிம வரிசை அட்டவணையில், உலோகங்கள் காணப்படுவது_______.

  • A இடது கலங்கள்
  • B மேல் வரிசைகள்
  • C வலது கலங்கள்
  • D அடி வரிசைகள்

Question - 7

அயனியாதல் என்தால்பியின் SI அலகு_______.

  • A eV atom-1
  • B k Cal mol-1
  • C J mol-1
  • D kJ mol-1

Question - 8

தனிமம் 115 ன் IUPAC பெயர்_______.

  • A Uun
  • B Uub
  • C Uup
  • D Uus

Question - 9

Mg2+ மற்றும் O2- சம எலக்ட்ரான் உடையவை எனில் (isoelectronic), கீழ்கண்ட கூற்றுகளில் எது சரி?

  • A O2- அயனியின் உருவளவு Mg2+ ஐ விட அதிகம்
  • B Mg2+ அயனியின் உருவளவு O2- ஐ விட அதிகம்.
  • C Mg2+ மற்றும் O2- ஆகியன ஒரே அயனி ஆரங்கள் உடையவை
  • D Mg2+ மற்றும் O2- ஆகியவற்றில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்கள் உண்டு.

Question - 10

A மற்றும் B தனிமங்களின் இணைதிற எலக்ட்ரான்கள் முறையே 3 மற்றும் 6 ஆகும். A மற்றும் B யிலிருந்து உருவாகும் எதிர்பார்ப்புள்ள சேர்மம் _______.

  • A A2B
  • B AB2
  • C A6B3
  • D A2B3