நீட் - வேதியியல் - புறப்பரப்பு வேதியியல்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

ஒரு தொங்கலிலிருந்து ஒரு கூழ்மம் உருவாவது

  • A கூழ்மமாக்கல்
  • B தொகுப்பு முறை
  • C வண்டலாக்குதல்
  • D துண்டுதுண்டாக்குதல்

Question - 2

ஒரு மின்னழுத்ததில் கூழ்மத் துகள்கள் இடம் பெயர்வது

  • A பிரௌலியன் இயக்கம்
  • B மின்னாற் சவூட்டு பரவல்
  • C மின்னாற் கூழ்ம பிரிப்பு
  • D மின்முனைக் கவர்ச்சி

Question - 3

வலிமைமிகு விசைகளால் பரப்பில் கவரப்படுதல் இவ்வாறு அழைக்கப்படுகிறது

  • A வேதிப்பரப்புக் கவர்ச்சி 
  • B இயற்பியல் பரப்புக் கவர்ச்சி
  • C மீள் பரப்புக் கவர்ச்சி
  • D மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று

Question - 4

ஊக்குவிக்கப்பட்ட கரியின் மீது அசிடிக் அமிலம் பரப்பில் கவரப்படுத்தல் 

  • A பரப்பில் கவர்பவர்
  • B பரப்புக் கவரும் பொருள்
  • C பரப்பில் கவரப்பட்ட பொருள்
  • D உறிஞ்சுபவர்

Question - 5

நிலைமாறு மிசெல் செரிவில் (CMC யில்) ஒருங்கிணைத்த துகள்களின் மூலக்கூறுகள்

  • A சிதைகின்றன
  • B ஒன்று சேர்கின்றன
  • C பிரிகையடைகின்றன
  • D இவற்றில் எதுவுமில்லை

Question - 6

இதில் பரப்புக் கவர்ச்சியானது பல அடுக்குகளாகும்.

  • A இயற்பியல் பரப்புக் கவர்ச்சி
  • B வேதியல் பரப்புக் கவர்ச்சி
  • C இரண்டும்
  • D இவற்றில் ஏதுமில்லை

Question - 7

இயற்பியல் பரப்புக் கவர்ச்சியில் பரப்புக் கவர்ச்சியைப் பொறுத்தளவில் கீழ்க்கண்டவற்றில் எது சரியல்ல?

  • A திண்மங்களின் மீதான பரப்புக் கவர்ச்சி மீள் தன்மையுடையது
  • B வெப்பநிலை அதிகரிக்கும் போது பரப்புக் கவர்ச்சி அதிகரிக்கிறது
  • C பரப்புக் கவர்ச்சி உடனடி நிகழ்வாகும்
  • D பரப்புக் கவர்ச்சி என்தால்பி மற்றும் என்ட்ரோபி இரண்டும் எதிர்க்குறியீடு உடையது

Question - 8

கீழ்க்கண்டவற்றில் எது உடன் பணியாற்று கூழ்மமாகும்? (associate colloid)

  • A புரதம் + நீர்
  • B சோப் + நீர்
  • C ரப்பர் + பென்சீன்
  • D பால்

Question - 9

உண்மைக் கரைசலிலுள்ள கரைபொருள் துகளின் பருமன் Vs ஆனது கூழ்மத்துகளின் பருமன் Vc உடன் ஒப்பிடும் போது 

  • A \(\frac { Vc }{ Vs } \approx { 10 }^{ 3 }\)
  • B \(\frac { Vc }{ Vs } \approx { 10 }^{ -3 }\)
  • C \(\frac { Vc }{ Vs } \approx { 10 }^{ 23 }\)
  • D \(\frac { Vc }{ Vs } \approx 1\)

Question - 10

1M 50 மிலி ஆக்சாலிக் அமிலம் (மூ.நி = 126) ஆனது 0.5 g மரக்கரியுடன் குலுக்கப்படுகிறது.பரப்புக்கவர்ச்சிக்குப் பின் கரைசலில் இருத்துச்செறிவு 0.5 M ஆகும்.ஒரு கிராம் கரியின் மீது பரப்புக் கவரப்படும் ஆக்ஸாலிக் அமிலத்தின் அளவு யாது?

  • A 3.15 g
  • B 1.575 g
  • C 6.3 g
  • D 12.60 g