நீட் - உயிரியல் - பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்கம்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

உயிரியல் அடிப்படையில் மலரைப் பொறுத்த வரையில் சரியான கூற்று எது?

  • A மலர்கள் அழகுக்காக தோன்றுகின்றன.
  • B மனிதர்களோடு மலர்கள் நெருங்கிய தொடர்புடையவை
  • C மனித உணர்வுகளை பிரதிபலிக்க மலர்கள் பயன்படுத்தபடுகின்றன.
  • D பால் இனப்பெருக்கத்திற்காக அமைப்பியலிலும், கருவியலிலும் சிறப்பான அமைப்புகள் மலர்கள் ஆகும்.

Question - 2

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை யாவை?
(i) தாவரங்கள் பூக்கள் காணப்படுவதற்கு முன்பே மலர்கள் தோன்றுவது முடிவு செய்யப்படுகிறது.
(ii) ஹார்மோன்கள் மற்றும் அமைப்பில் பல மாற்றங்கள் துவங்குகின்றன.
(iii) திசுக்கள் வேறுபாடு அடைவதால் பிரைமோர்டியம் தோன்றுகிறது.   

  • A (i) மற்றும் (ii) சரியானது  
  • B (ii) மற்றும் (iii) சரியானது   
  • C (i) மற்றும் (iii) சரியானது   
  • D (i) (ii) மற்றும் (iii) சரியானது    

Question - 3

இவற்றுள் மகரந்தத் தாள் வட்டத்தின் பாகமல்லாதது எது?

  • A மகரந்தப்பை 
  • B சூழ் தண்டு 
  • C மகரந்தக் கம்பி 
  • D மகரந்தத் தாள் 

Question - 4

மலரின் வளர்ச்சி, வெளிப்புறத்திலிருந்து காணப்படுவது 

  • A புல்லிகள் \(\rightarrow \) அல்லிகள்\(\rightarrow \)மகரந்தத்தாள் \(\rightarrow \)சூலிலை  
  • B அல்லிகள்\(\rightarrow \)புல்லிகள்\(\rightarrow \)மகரந்தத்தாள்\(\rightarrow \)சூலிலை 
  • C அல்லிகள்\(\rightarrow \)புல்லிகள்\(\rightarrow \)சூலிலை\(\rightarrow \)மகரந்தத்தாள் 
  • D புல்லிகள்\(\rightarrow \)அல்லிகள்\(\rightarrow \)சூலிலை\(\rightarrow \)மகரந்தத்தாள் 

Question - 5

அமைப்பியல் படி ஒரு மலர் கருதப்படுவது 

  • A வேர்
  • B கிளை
  • C இலை 
  • D கனி

Question - 6

அழகுக்காக மற்றும் மலருக்காக தாவரங்களை வளர்ப்பது பற்றிய அறிவியல் துறை 

  • A திசுவளர்ப்பு 
  • B சிறுசெடி வளர்ப்பு
  • C தோட்டக்கலை 
  • D மலரியல் 

Question - 7

மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பானது 

  • A மகரந்தத் தாள் 
  • B சூலிலை
  • C புல்லி வட்டம் 
  • D அல்லி வட்டம்

Question - 8

ஒரு கொத்து மலர்களைத் தாங்கும் அச்சு அழைக்கப்படுவது 

  • A மலர்மொட்டு 
  • B பூபிரைமார்டியம்  
  • C மஞ்சரி 
  • D இலைக்காம்பு 

Question - 9

பூத்தளம் அல்லது அல்லி இதழ்களில் மகரந்தக் கம்பியின் அடிப்பாகம் இணைக்கப்பட்டிருப்பதை இவ்வாறு அழைக்கலாம்.

  • A அல்லி முன்பானவை 
  • B அல்லி ஒட்டியவை 
  • C அல்லி பின்னானவை 
  • D அல்லி கீழானவை 

Question - 10

ஈரறையுடைய மரந்தப்பை 
(i) குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு பக்கங்களுடன் காணப்படும்
(ii) மூலைகளில் நான்கு மைசிரோஸ்பொராஞ்சியங்கள் காணப்படும்.
(iii) நான்கு ஸ்பொராஞ்சியங்கள் உடையது       

  • A (i) மற்றும் (ii) சரியானது   
  • B (ii) மற்றும் (iii) சரியானது   
  • C (i) மற்றும் (iii) சரியானது   
  • D (i)(ii) மற்றும் (iii) சரியானது