நீட் - உயிரியல் - நரம்பியல் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைவு

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு என்பது

  • A நெஃப்ரான்
  • B நியூரான் 
  • C ஆக்ஸான்
  • D டெண்டிரான்

Question - 2

மைய நரம்பு மண்டலம் இவற்றை உள்ளடக்கியவை

  • A மூளை
  • B தண்டுவடம்
  • C மூளை மற்றும் தண்டுவடம் இரண்டும் 
  • D உணர் இழைகள்

Question - 3

திசுக்கள்/உறுப்புகளிலிருந்து மைய நரம்பு மண்டலத்திற்கு தூண்டுதலை கடத்துவது

  • A உணர் இழைகள்
  • B இயக்க இழைகள்
  • C மூளை நரம்புகள்
  • D தண்டு வாட நரம்புகள்

Question - 4

நியூரான் உள்ளடக்கியவை

  • A செல் உடலம்
  • B டெண்டிரைட்டுகள்
  • C ஆக்ஸான்
  • D மேற்கூறிய அனைத்தும்

Question - 5

 ________களின் சைட்டோபிளாசத்தில் நிசில் துகள்கள் காணப்படுகின்றன

  • A செல் உடலம் மற்றும் சிறுநரம்பு இழை
  • B சிறுநரம்பு இழைகளில் மட்டும்
  • C நரம்பிழைத்தண்டு
  • D செல் உடலத்தில் மட்டும்

Question - 6

கண்ணின் விழித்திரையில் காணப்படும் நியூரான் வகை

  • A பல முனை
  • B இரு முனை
  • C ஒரு முனை
  • D பொய்யான ஒரு முனை

Question - 7

ஒரு ஆக்ஸான் மற்றும் இரண்டும் அல்லது மேற்பட்ட டெண்டிரைட்டுகளுடைய நியூரான்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

  • A ஒரு முனை
  • B பொய்யான ஒரு முனை
  • C இரு முனை
  • D பல முனை

Question - 8

செல் உடலத்தில் ஒற்றை ஆக்ஸானுடன் மட்டுமே உள்ள பண்புகள் உடையது.

  • A ஒரு முனை நியூரான்
  • B பொய்யான ஒரு முனை நியூரான்
  • C இரு முனை நியூரான்
  • D பல முனை நியூரான்

Question - 9

இரண்டு மையலின் உறைகளின் இடைவெளிகள் இவ்வாறு அழைக்கப்படும்.

  • A ஸ்வான் செல்கள்
  • B ரேன்வியரின் கணுக்கள்
  • C சினாப்டிக் குமிழ்
  • D ஆக்ஸான்

Question - 10

மையலின் நரம்பு உறைகள் இதில் காணப்படும்

  • A தண்டுவட நரம்புகள்
  • B மூளை நரம்புகள்
  • C தண்டுவடம் மற்றும் மூளை நரம்புகள் இரண்டும்
  • D உடல நரம்பு மண்டலம்