நீட் - உயிரியல் - உயிர் தொழில்நுட்பக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

ஐரோப்பிய உயிர்தொழில்நுட்ப கூட்டமைப்பின் வரையரையின்படி உயிர்தொழில் நுட்பவியல்

  • A உயிரினங்களிலிருந்து மனிதர்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் நுட்பங்களைப் பற்றியது
  • B மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகளை பயன்படுத்தி அதிக அளவு உற்பத்தி செய்தல்
  • C செயற்கை கருவூட்டல், வாக்சின் தயாரிப்பு மற்றும் தவறான ஜீன்களை (மரபணு) சரியாக்குதல்
  • D இயற்கை அறிவியல்,  உயிரினங்கள், செல்பாகங்கள் போன்றவற்றையும் மூலக்கூறு ஒத்த செயலிகளையும் பயன்படுத்தி பொருட்களையும் சேவைகளையும் பெறுதல்

Question - 2

மறுசேர்க்கை DNA வினை ஒரு DNA வை இதனால் பிரிப்பதன் மூலம் பெறமுடியும்

  • A வரையறை எண்டோநியூக்ளியேஸ்கள்
  • B எக்சோ நியூக்ளியேஸ்கள்
  • C லைகேஸ்கள்
  • D பிரைமேஸ்

Question - 3

மரபுப் பொறியியல் சாத்தியமானது, ஏனெனில்

  • A பாக்டீரியாவின் நச்சுயிர் பண்பக இடையீட்டு மாற்றம் (டிரான்ஸ்டக்ஸின்) கண்டறியப்பட்டுள்ளது.
  • B எலெக்ட்ரான் நுண்ணோக்கி வழியாக DNA வைக் காண முடியும்
  • C குறிப்பிட்ட புள்ளிகளில் எண்டோநியூக்ளியோஸ் மூலம் DNA வை துண்டிக்க முடியும்
  • D பாக்டீரியாவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள வரையரை எண்டோ நியூக்ளியோஸ்களை செயற்கையாக பயன்படுத்த முடியும்

Question - 4

மரபுப் பொறியியலோடு தொடர்புடையது எது?

  • A திடீர் மாற்றம்
  • B பிளாஸ்மிடு
  • C பிளாஸ்டிடு
  • D ஹெட்டிரோசிஸ்

Question - 5

பிளாஸ்மிடுகள் ஜீன்குளோனிங் (மரபணு) செய்ய பொருத்தமான கடத்திகள், ஏனெனில்

  • A அவை சிறிய வட்டவடிவ DNA மூலக்கூறுகள், ஓம்புயிரி DNA உடன் இணைக்கப்பட முடியும்
  • B அவை சிறிய வட்ட வடிவ DNA மூலக்கூறுகள், தாங்களாகவே பெருக்கமடைய முடியும்
  • C புரோகேரியோட்டு மற்றும் யூகேரியோட்டு செல்களை இணைக்கிறது
  • D பெரும்பாலும் ஆன்டிபயாடிக் ஜீன்களை (மரபணு) கொண்டுள்ளன.

Question - 6

சோதனைச் சாலையில் இதன் மூலம் மிகப்பெரிய எலியை உருவாக்க முடியும்

  • A மரபணு திடீர் மாற்றம்
  • B மரபணுக்களை மாற்றியமைத்தல்
  • C மரபணுக்களை உருவாக்குதல்
  • D மரபணுக்களை டூப்ளிகேட் செய்தல்

Question - 7

பிளாஸ்மிடுகளில் கண்டறியப்பட்ட அதிக காரங்களின் எண்ணிக்கை

  • A 50 kb
  • B 500 kb
  • C 5000 kb
  • D 5 kb

Question - 8

பிளாஸ்மிடு என அழைக்கப்படுபவை

  • A கடத்தியாகப் பயன்படும் DNA துண்டு
  • B இரண்டு ஜீன்களை (மரபணு) இணைக்கும் துண்டு
  • C கடத்தியாக செயல்படும் mRNA
  • D தன்னூட்டமுள்ள துண்டு

Question - 9

ஒரு பாக்டீரியாவில் பிளாஸ்மிடு எனப்படுவது

  • A குரோமசோமுக்கு வெளியே காணப்படுவது
  • B முதன்மையான DNA
  • C செயல்படாத mRNA
  • D மீண்டும் காணப்படும் ஜீன் (மரபணு)

Question - 10

வரையரை என்டோநியூக்ளியேஸ்கள்

  • A செல் இறக்கும் போது DNA வை அழிக்க மனித செல்களில் காணப்படுகின்றது
  • B DNA வின் விட்ரோ முறையில் உருவாக்க பயன்படுகிறது
  • C இரு DNA துண்டுகளை இணைக்க மரபுப் பொறியியலில் பயன்படுத்தப்படுகின்றது.
  • D பாக்டீரியாக்களால் பாதுகாப்பு நுட்பமாக உருவாக்கப்படுகின்றது.