நீட் - இயற்பியல் - துகள்களின் அமைப்பு மற்றும் சுழல் இயக்கம்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

1 m ஆரமும் 50 kg நிறையும் உடைய ஒரு வட்ட மேஜையில் 1 m  உயரமுள்ள நான்கு கால்கள் சமச்சீராக அதன் சுற்றளவில் பொருத்தப்பட்டு உள்ளது. மேஜை சரியாதவாறு மேஜையின் எந்தவொருப் புள்ளியிலும் வைக்கப்படக்கூடிய பெரும நிறை _______.

  • A 110 kg
  • B 140.2 kg
  • C 120.8 kg
  • D 80.4 kg

Question - 2

மூன்று நிறைகள் 2 kg,4 kg மற்றும் 6kg ஆகியவை XY தளத்தில் முறையே (0, 0), (0, 2) மற்றும் (2, 2) ஆயத் தொலைவுகளில் வைக்கப்பட்டுள்ளன. நிறைகளின் மையத்தின் ஆயத் தொலைவு _______.

  • A (1,1.67)
  • B (1,2)
  • C (2,1.67)
  • D (2,0.67)

Question - 3

இரு வட்டத் தகடுகள் ஒரே பொருளானது மற்றும் ஒரே நிறையுடையது. அவற்றின் தடிமன்கள் விகிதம் 1:3 எனில் அவற்றின் நிலைமத்திருப்புத் திறன்களின் விகிதம் _______.

  • A 3:1
  • B 1:3
  • C 1:9
  • D \(1:\sqrt 3\)

Question - 4

ஒரு திடக்கோளம் h உயரமுடைய சாய்தளத்திலிருந்து சறுக்காமல் உருண்டு கீழ் நோக்கி வருகிறது. சாய்தளத்தின் அடிப்பாகத்தை அடையும் போது கோளத்தின் திசைவேகம் _______.

  • A \(\sqrt {gh}\)
  • B \(\sqrt {\frac{10}{7}gh}\)
  • C \(\sqrt {\frac{7}{10}gh}\)
  • D \(\sqrt {\frac{10}{3}gh}\)

Question - 5

9M  நிறையும் R ஆரமுடைய வட்டத் தகட்டிலிருந்து \(\frac{R}{3}\) ஆரமுடைய இரு சிறு வட்டத் தகடுகள் படத்தில் காட்டியவாறு நீக்கப்படுகின்றன. மீதமுள்ள பொருளுக்கு மையம் O  வழியாக தகட்டின் தளத்திற்கு செங்குத்தாகச் செல்லும் அச்சைப் பற்றிய நிலைமத் திருப்புத் திறன் _______.

  • A \(\frac{8}{5}MR^2\)
  • B \(\frac{7}{2}MR^2\)
  • C 4 MR2
  • D \(\frac{5}{2}MR^2\)

Question - 6

ஃ பிளைவில் ஒன்றின் கோணத் திசைவேகம் காலத்தைச் சார்ந்து \(\omega =p-qt\) என மாறுகிறது. இதில் P  மற்றும் q என்பவை மாறிலிகள் ஓய்வுக்கு வரும் முன் திரும்பும் கோணம் _______.

  • A \(\frac{q}{p}\)
  • B \(\frac{p^2}{2q}\)
  • C \(\frac{q^2}{2p}\)
  • D \(\frac{p}{q}\)

Question - 7

ஒரு சமச்சீரான M  நிறையுடைய மெல்லிய சதுரவடிவத் தகடு இரு சமபக்க முக்கோணங்களை உள்ளடக்கியதாக படத்தில் காட்டியபடி உள்ளது. தகட்டின் நிறை மையத்தின் வழியே தகட்டின் தளத்திற்கு செங்குத்தாகச் செல்லும் அச்சைப் பற்றிய நிலைமத் திருப்புத் திறன் 2.4 Ma2 மையம் O வின் வழியே இரு முனைகளையும் இணைக்கும் கோட்டிற்கு இணையாக ஒரு உச்சி வழியாக செல்லும் AB  என்ற அச்சைப் பொருத்த நிலைமத் திருப்புத்திறன் _______.

  • A 8.67 Ma2
  • B 6.4 Ma2
  • C 4.2 Ma2
  • D 2.4 Ma2

Question - 8

\(4\times 10^{-3}kgm^2\) நிலைமத் திருப்புத் திறன் கொண்ட ஒரு சக்கரம் விநாடிக்கு 10 சுற்றுகள் வீதம் சுற்றுகிறது. 5 விநாடிகள் அதனை நிறுத்துவதற்குத் தேவையான திருப்பு விசை _______.

  • A \(2\pi \times 10^{-3}Nm\)
  • B \(8\pi \times10^{-3}Nm\)
  • C \(16\pi \times10^{-3}Nm\)
  • D \(8\times10^{-3}Nm\)

Question - 9

ஒவ்வொன்றும் 0.1 m ஆரமும் 1 kg நிறையும் கொண்ட நான்கு கோளங்கள் 0.4 m பக்கமுடைய சதுரத்தின் நான்கு மூலைகளிலும் அவற்றின் மையங்கள் வரும்படி வைக்கப்படுகின்றன. எந்தவொரு மூலைவிட்டத்தைப் பொருத்து இந்த அமைப்பின் நிலைமத் திருப்புத்திறன் _______.

  • A \(2.8\times10^{-2}kgm^2\)
  • B \(1.4\times10^{-2}kgm^2\)
  • C \(9.6\times10^{-2}kgm^2\)
  • D \(2\times10^{-2}kgm^2\)

Question - 10

20 kg  நிறை கொண்ட இரு பையன்கள் 4m நீளமும் 10 kg நிறையும் கொண்ட ஒரு சட்டத்தின் எதிரெதிர் முனைகளில் அமர்ந்துள்ளனர். சட்டம் அதன் மையத்தின் வழியே செங்குத்தாகச் செல்லும் அச்சைப் பற்றி 10 சுற்றுகள்/நிமிடம் வீதத்தில் சுற்றுகிறது. ஒவ்வொரு பையனும் தரையைத் தொடாமல் 1 m தூரம் மையத்தை நோக்கி நகர்ந்தால் அதன் கோணத் திசைவேகம். (சுமாராக) _______.

  • A 32.64 rev/min
  • B 3.25 rev/min
  • C 16.25  rev/min
  • D 20  rev/min