நீட் - இயற்பியல் - நல்லியல்பு வாயுவின் நடத்தை மற்றும் இயக்கவியல் கொள்கை

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

n மோல்கள் உள்ள நல்லியல்பு வாயு ஒன்றின் வெப்ப நிலை P = aT -1 என்ற நிகழ்வின்படி T யிலிருந்து 4T  நிலைக்கு உயருகிறது. வாயுவால் செய்யப்பட்ட வேலை________.

  • A nRT  
  • B 4nRT   
  • C 2nRT   
  • D 6nRT   

Question - 2

ஈரணு நல்லியல்பு வாயு ஒன்று வெப்ப மாற்றீடற்ற நிகழ்வுக்கு உட்படும் போது, வெப்பநிலை மற்றும் பருமன் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு TVx = மாறிலி, இதில் x என்பது ________.

  • A \(\frac{2}{5}\)
  • B \(\frac{1}{3}\)
  • C \(\frac{2}{3}\)
  • D \(\frac{7}{5}\)

Question - 3

வெவ்வேறு பருமன் கொண்ட இரு அறைகளில் ஒன்றில் P1 அழுத்தத்தில் m1g அளவு கொண்ட வாயும், மற்றொன்றில் P2 அழுத்தத்தில் m2g அளவு கொண்ட அதே வாயும்  உள்ளன. இவை இரண்டும் இணைக்கப்படுகின்றன. வெப்பநிலை மாறாதிருக்கும் போது அவைகளின் பொதுவான அழுத்தம்________.

  • A \(\frac { { m }_{ 1 }{ P }_{ 2 }+{ m }_{ 2 }{ P }_{ 1 } }{ { m }_{ 1 }+{ m }_{ 2 } } \)
  • B \(\frac { { m }_{ 1 }P_{ 2 }(P_{ 1 }+P_{ 2 }) }{ { m }_{ 1 }^{ 2 }+{ m }_{ 2 }^{ 2 } } \)
  • C \(\frac { { m }_{ 1 }P_{ 1 }+{ m }_{ 2 }{ P }_{ 2 } }{ { m }_{ 1 }+{ m }_{ 2 } } \)
  • D \(\frac { \left( { m }_{ 1 }+{ m }_{ 2 } \right) P_{ 1 }P_{ 2 } }{ { m }_{ 1 }{ P }_{ 2 }+{ m }_{ 2 }{ P }_{ 1 } } \)

Question - 4

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் சம நிலையிலுள்ள வாயு அமைப்பு ஒன்றின் வாயு மூலக்கூறுகளின் இருமடி மூல இருமடிச் சராசரித் திசைவேகம் (vrms),பெரும்பான்மைத் திசைவேகம் (v*)மற்றும் சராசரித் திசைவேகம்  (vavg) ஆகியவை முறையே vrms, v * மற்றும் v avg என்க  vrms:v *:v avg என்பன முறையே ________.

  • A 8 : 3\(\pi \) : 2\(\pi \)
  • B 8: 2\(\pi \) : 3\(\pi \)
  • C 3\(\pi \): 2\(\pi \) : 8
  • D 3: 2: 8

Question - 5

1 லிட்டர் கொள்ளளவு பாத்திரம் ஒன்றில் 2 மோல் ஆக்ஸிஜன் 4 வளிமண்டல அழுத்தத்தில் உள்ளது. ஆக்ஸிஜன் மூலக்கூறு ஒன்றின் நேர்கோட்டு சராசரி இயக்க ஆற்றல் ________.(இங்கு KB -என்பது போல்டஸ் மேன் மாறிலி )

  • A \(\frac { 300K_{ B } }{ R } \)
  • B \(\frac { 100K_{ B } }{ R } \)
  • C \(\frac { R } { 600K_{ B } }\)
  • D 6000KB 

Question - 6

உறுதியான ஈரணு மூலக்கூறு ஒன்றின் சுழற்சி இயக்க ஆற்றலுக்கும் மொத்த இயக்க ஆற்றலுக்கும் இடையேயான விகிதம்________.

  • A \(\frac{5}{2}\)
  • B \(\frac{2}{3}\)
  • C \(\frac{3}{5}\)
  • D \(\frac{2}{5}\)

Question - 7

நல்லியல்பு வாயு ஒன்றின் வெப்பநிலை 120K லிருந்து 480K  க்கு உயருகிறது. 120 K  வெப்பநிலையில்,வாயு மூலக்கூறின் இருமடிமூல இருமடிச் சராசரி,திசைதிவேகம் v, எனில் 480K வெப்பநிலையில்அதன் மதிப்பு________.

  • A \(\frac {V }{4}\)
  • B 4v 
  • C \(\frac {V }{2}\)
  • D 2v 

Question - 8

அறை வெப்பநிலையில் ஆக்ஸிஜன் மூலக்கூறின் இருமடிச் சராசரித் திசைவேகம் 500ms-1 அதே வெப்பநிலையில் ஹைட்ரஜன் மூலக்கூறின் இருமடிமூல சராசரித் திசைவேகம்________.

  • A 100 ms -1
  • B 1000 ms -1
  • C 2000 ms -1
  • D 10 ms -1

Question - 9

கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் 3g ஹைட்ரஜனின் இயக்க ஆற்றலுக்கும் இடையேயான 5g  ஆக்ஸிஜனின் இடையேயான விகிதம்________.

  • A 12:1
  • B 1:12
  • C 3:4
  • D 1:3

Question - 10

வாயு ஒன்றின் இரு மூலக்கூறுகளின் வேகங்கள் முறையே 1 kms-1மற்றும் 9 kms-1இவ்விரு மூலக்கூறுகளின் இருமடிமூல இருமடிச் சராசரித் திசைவேகம் (kms-1ல் )________.

  • A 2
  • B \(\sqrt 3\)
  • C 4
  • D \(\sqrt {41}\)