நீட் - வேதியியல் - ஹைட்ரோகார்பன்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

C-C மற்றும் C-H ஒற்றைப் பிணைப்புள்ள சேர்மங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

  • A நிறைவற்ற ஹைட்ரோகார்பன்கள்
  • B நிறைவுறா ஹைட்ரோகார்பன்கள்
  • C அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள்
  • D பல்வளைய சேர்மங்கள்

Question - 2

CNG யால் செயல்படும் தானியங்களின் குறைவான மாசுபடுதலை உண்டாக்குகின்றன. CNG என்பது _______.

  • A Condensed Natural Gas
  • B Compressed Natural Gas
  • C Compacted Narcotic Gas
  • D Compensated Natural Gas

Question - 3

ஒரு ஹைட்ரோகார்பனில், வேறுபட்ட கார்பன் அணுக்களை இணைத்து, ஒற்றைப் பிணைப்புகளுடைய திறந்த சங்கிலித்தொடர் கார்பன் அணுக்களை உருவாக்கினால் அவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன

  • A அல்கைன்
  • B அல்கீன்
  • C அல்கேன்
  • D வளைய அல்கேன்

Question - 4

நிலக்கரி சுரங்கங்களிலும், சதுப்பு நிலங்களிலும் காணப்படும் வாயு_______.

  • A பென்சீன்
  • B மீத்தேன்
  • C எத்திலின்
  • D அசிட்டிலின்

Question - 5

கீழ்க்கண்ட சேர்மங்களில் எந்த ஒன்று பாரபீன்கள் எனப்படும்?

  • A அல்கீன்கள்
  • B அல்கேன்கள்
  • C அல்கைன்கள்
  • D அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்

Question - 6

அல்கேன்களில் C - C மற்றும் C - H பிணைப்புகள் முறையே_______.

  • A 112 pm & 154 pm
  • B 154 pm & 112 pm
  • C 133 pm & 112 pm
  • D 120 pm & 112 pm

Question - 7

C4H10 விற்கு இருக்கக்கூடிய அமைப்பு ஐசோமர்களின் எண்ணிக்கை_______.

  • A 0
  • B 2
  • C 3
  • D 4

Question - 8

C5H12 விற்கு இருக்கக்கூடிய அமைப்பு ஐசோமர்களின் எண்ணிக்கை_______.

  • A 2
  • B 3
  • C 4
  • D 5

Question - 9

2, 2-டை மெத்தில் புரோப்பேனின் பொதுப்பெயர்_______.

  • A ஐசோபியூட்டேன்
  • B ஐசோபென்டேன்
  • C நியோபென்டேன்
  • D n -பென்டேன்

Question - 10

கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று C6H14 மூலக்கூறு வாய்பாடுடைய அல்கேனின் மாற்று அல்ல?

  • A 2, 3-டை மெத்தில் பியூட்டேன்
  • B 2, 2-டை மெத்தில் பியூட்டேன்
  • C 3 -மெத்தில் பென்டேன்
  • D 2,3 டை-மெத்தில் பென்டேன்