நீட் - வேதியியல் - பருப்பொருளின் நிலைகள்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

ஒரு  நல்லியல்பு வாயுவின் 'அமுக்கும் காரணி'_____. 

  • A 1.5
  • B 1.0
  • C 2.0
  • D -\(\propto \)

Question - 2

ஒரு நல்லியல்பு வாயு, கட்டுப்பாடற்ற விரிவடையும் போது, எந்த வித குளிர்ச்சியும் அடைவதில்லை: ஏனெனில் மூலக்கூறுகள் _____. 

  • A எதிர்மாறு வெப்ப நிலைக்கு மேல் உள்ளன
  • B எந்த வித ஈர்ப்பு விசையையும் செலுத்துவது இல்லை.
  • C மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலுக்கு சமமான வேலையை செய்கின்றன.
  • D ஆற்றல் இழப்பு இல்லாமல் மோதுகின்றன.

Question - 3

கீழ்கண்ட எந்த அமைப்பிற்கு டால்டனின் பகுதி அழுத்த விதி  பயன்படுவதில்லை?

  • A N2+O2
  • B N2+NH3
  • C N2+H2
  • D H2+Cl2

Question - 4

இயல்பு வாயுவின் நடத்தை பற்றிய எந்தக் கூற்று தவறானது?

  • A நல்லியல்பு  வாயுவைவிட இயல்பு வாயு அதிக அழுத்தத்தை செலுத்துகிறது.
  • B அதிக வான்டர் வால்ஸ் மாறிலியான 'a' உடைய  இயல்பு வாயு அதிகமாக திரவமாகக் கூடியது.
  • C குறைந்த அழுத்தத்திலும் அதிக வெப்ப நிலையிலும் ஓர் இயல்பு வாயு நல்லியல்பு வாயுவாக மாறுகிறது.
  • D N2 வை  விட  CO2  குறைந்த அளவு அமுக்கப்படக் கூடியது.

Question - 5

கீழ்கண்ட  வகைகளில், எதில்  நல்லியல்பு வாயுவை விட ஓர் இயல்பு  வாயு அதிக அமுக்கப்படக் கூடியது?

  • A PV > RT 
  • B PV = RT 
  • C PV < RT 
  • D இவற்றில் ஏதுமில்லை

Question - 6

ஒரு மோல் வாயுவிற்கான வான்டர்  வாலஸ் சமன்பாடு (P + a/V2)(V - b) = RT ; இங்கு_____. 

  • A P மற்றும் V  ஆகியன  முறையே நல்லியல்பு அழுத்தம் மற்றும்  நல்லியல்பு பருமன்.
  • B (V - b) என்பது இயல்பு பருமன்.
  • C (P + a/V2) என்பது நல்லியல்பு அழுத்தம்.
  • D (P + a/V2) என்பது இயல்பு அழுத்தம்.

Question - 7

மொத்த அழுத்தம் 500 Torr உள்ள  ஒரு முடிய  கலனில் N2 மற்றும்  O2 ஆகியன 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளது. N2 நீக்கப்பட்டால், அழுத்தமானது _____. 

  • A 500 Torr
  • B 300 Torr
  • C 200 Torr
  • D 100 Torr

Question - 8

ஒரு கலனில் உள்ள ஓர் வாயுக்கலவையில் 2 மோல் A, 3 மோல் B, 5 மோல் C மற்றும் 10 மோல் D ஆகியன உள்ளன. C யின் பகுதி அழுத்தம் 1.5 atm எனில், மொத்த அழுத்தமானது _____. 

  • A 3  atm
  • B 6  atm
  • C 9  atm
  • D 15  atm

Question - 9

ஓர் இயல்பு வாயு, நல்லியல்பு தன்மையை பெறுவது_____. 

  • A குறைவெப்பநிலை மற்றும் குறை அழுத்தத்தில்
  • B குறைவெப்பநிலை மற்றும் உயர் அழுத்தத்தில்
  • C உயர் வெப்பநிலை மற்றும் குறை அழுத்தத்தில்
  • D உயர் வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தத்தில்

Question - 10

வெப்பநிலை அதிகரிக்கும் போது, கீழ்கண்டவற்றில் எப்பண்பு அதிகரிக்கிறது? 

  • A பரப்பு இழுவிசை
  • B பாகுப்பண்பு
  • C மோலாலிட்டி
  • D ஆவி அழுத்தம்