நீட் - இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

மின்காந்த அலைகள் உருவாக்கத்தில் அதிகமாக பங்களித்த இயற்பியலாளர்_______.

  • A ரூடால்ஃப் ஹெர்ட்ஸ்
  • B மைக்கல் ஃபாரடே
  • C J.J.தாம்சன்
  • D ஐசக் நியூட்டன்

Question - 2

R1 = 10 \(\pm \) 0.3 ஓம் மற்றும் R2 = 20 \(\pm \) 0.4 ஓம் ஆகிய இரு மின்தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பக்க இணைப்பில் அவற்றின் தொகுபயன் மின்தடை மதிப்பு ______.

  • A 5.7 \(\pm \) 0.1
  • B 15.2 \(\pm \) 0.2
  • C 6.7 \(\pm \) 0.2
  • D 9.5 \(\pm \) 0.1

Question - 3

கனசதுரம் ஒன்றின் அடர்த்தியானது அதன் நிறை மற்றும் பக்கங்களின் நீளங்களை அளவிடுவதன் மூலம் அளவிடப்படுகிறது. நிறை மற்றும் நீளம் அளவீட்டில் ஏற்படும் பெரும பிழைகள் முறையே 3% மற்றும் 2% எனில் அடர்த்தி அளவிடுதலின் ஏற்படும் பிழை ______.

  • A 1%
  • B 9%
  • C 7%
  • D 5%

Question - 4

தனி ஊசலைப் பயன்படுத்தி புவி ஈர்ப்பு முடுக்கத்தை அளவிடும் பொது மாணவர் ஒருவர், ஊசலின் நீளத்தை அளவிடுதலில் 1% நேர்ப்பிழையும் அலைவு காலம் அளவிடுதலில் 3% எதிர்ப்பிழையும் செய்கிறார். 'g' அளவிடுதலில் ஏற்படும் சதவீதம் பிழை _______.

  • A 2%
  • B 4%
  • C 10%
  • D 7%

Question - 5

0.0006012 m -ல் உள்ள எண்ணுருக்களின் எண்ணிக்கை _______.

  • A 3
  • B 4
  • C 5
  • D 7

Question - 6

ஒரே பரிமாணங்கள் உள்ள இயற்பியல் அளவுகளை கண்டறிக.

  • A ஒளி ஆண்டு மற்றும் ஊசலில் அலைவுக் காலம்
  • B கோண உந்தம் மற்றும் திருப்பு விசை
  • C ஆற்றல் மற்றும் மீட்சியியல் குணகம்
  • D திருப்புவிசை மற்றும் வேலை

Question - 7

L, C மற்றும் R என்ற இயற்பியல் அளவுகள் முறையே மின் நிலைமம், மின்தேக்குத் திறன் மற்றும் மின்தடை ஆகியவற்றை குறிக்கின்றன. இவற்றில் எந்த கூட்டமைப்பு அதிர்வெண் பரிமாணத்தைத் தரும்?

  • A \({1\over LC}\)
  • B \({R\over L}\)
  • C \({1\over RL}\)
  • D \({C\over L}\)

Question - 8

C என்பது மின்தேக்குத் திறன் மற்றும் V என்பது மின்னழுத்தம் எனில், CV2 -ன் பரிமாண வாய்பாடு ________.

  • A ML2T-2
  • B ML-1T-2
  • C ML-2T-3
  • D ML2T-1

Question - 9

காலத்தைச் சார்ந்து x - அச்சில் துகள் ஒன்றின் இடப்பெயர்ச்சி x = at + bt2 - ct3. b ன் பரிமாணங்கள் ______.

  • A L0T-3
  • B LT-3
  • C LT-2
  • D LT3

Question - 10

நல்லியல்பு வாயு ஒன்றின் n மோல்களுக்கான வான்டர்வால் சமன்பாடு \((P +{a \over V^2})(V -b )=RT \) இதில் P என்பது அழுத்தம், V என்பது பருமன், T என்பது தன் வெப்பநிலை, R என்பது மோலார் வாயு மாறிலி மற்றும் 'a' மற்றும் 'b' என்பன வான்டர் வால் மாறிலிகள். 'a' -ன் பரிமாணங்கள் எதனுடைய பரிமாணங்களுக்கு சமமாக இருக்கும்?

  • A \({P \over V }\)
  • B PV
  • C PV2
  • D P2V