நீட் - இயற்பியல் - அலைவுகள் மற்றும் அலைகள்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

ஆதிப்புள்ளி (origin)யை மையமாகக் கொண்டு தனிச்சீரிசை இயக்கம் கொள்ளும் பொருளின் அலைவு காலம் 2s. அதன் மொத்த ஆற்றலில் 25% நிலை ஆற்றலாக அமைய ஆகும் காலம் ________. 

  • A \({1\over3}s\)
  • B \({1\over4}s\)
  • C \({1\over12}s\)
  • D \({1\over6}s\)

Question - 2

ஒரு துகளின் இடப்பெயர்ச்சிக்கான சமன்பாடு x = 4(cos \(\pi \ t +sin \pi t\)) துகளின் வீச்சு ________.

  • A 4
  • B \(4\sqrt{2}\)
  • C -4
  • D 8

Question - 3

மீட்சியல் பண்பற்ற நூலில் கட்டி தொங்கவிடப்பட்ட கனமான உலோகக் குண்டு ஒன்று காற்று ஊடகத்தில் அலைவு நேரம் T கொண்ட தனி ஊசலாக செயல்படுகிறது. உலோகக் குண்டின் அடர்த்தியில் \(({1\over10})\)வது  மடங்கு அடர்த்தி கொண்ட ஒரு பாகு நிலையற்ற திரவத்தினுள் உலோகக் குண்டு அமிழ்ந்திருக்கும் போது அலைவுறும் ஊசலின் அலைவு நேரம் ________.

  • A \(\sqrt{10\over9}T\)
  • B \({10\over9}T\)
  • C T
  • D \(\sqrt{9\over10}T\)

Question - 4

நேர்கோட்டு தனிச்சீரிசை இயக்கம் மேற்கொள்ளும் துகள் ஒன்று சமநிலையிலிருந்து 4cm தொலைவிலுள்ள போது அதன் திசைவேகம் 3cms-1ஆகவும் 3cm தொலைவிலுள்ள போது 4cms-1ஆகவும் உள்ளது. அலைவின் வீச்சு ________.

  • A 7.2 cm
  • B 10.5 cm
  • C 5cm
  • D 9cm

Question - 5

15kg நிறையுடைய தட்டு ஒன்று, ஒவ்வொன்றும் சுருள்வில் மாறிலி k உடைய இரு சுருள்வில்களால் படத்தில் காட்டியவாறு தாங்கப்படுகிறது. தட்டானது சிறிது அமுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவுடன் அது 2s அலைவு காலத்தில் தனிச்சீரிசை இயக்கம் மேற்கொள்கிறது. அதன் மீது m நீரையுடைய பொருள் ஒன்று வைக்கப்பட்டவுடன் அலைவு காலம் 4s ஆகிறது. நிறை 'm'ன் மதிப்பு ________.

  • A 35kg
  • B 45kg
  • C 22kg
  • D 15kg

Question - 6

துகள் ஒன்று 'f' என்ற அதிர்வெண்ணில் தனிச்சீரிசை இயக்கம் மேற்கொள்கிறது.அதன் நிலையாற்றல் மாறும் அதிர்வெண்________. 

  • A 2f 
  • B f/2
  • C 4f
  • D f

Question - 7

0.1kg நிறையுடைய ஒரு துகள் 0.1m வீச்சில் தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்கிறது. துகளானது நடுநிலைப் புள்ளியை கடக்கும் போது அதன் இயக்க ஆற்றல் 8 x 10-3J. அலைவின் ஆரம்பக் கட்டம் 60° எனில் துகளின் இயக்கச் சமன்பாடு________.

  • A \(y=0.1 \ sin ({t\over4}+{\pi \over 6})\)
  • B \(y=0.1 \ sin ({t\over2}+{\pi \over 3})\)
  • C \(y=0.1 \ sin ({4t}-{\pi \over 3})\)
  • D \(y=0.1 \ sin ({4t}+{\pi \over 3})\)

Question - 8

நிறையற்றதும் சுருள்வில் காரணி k1 மற்றும் kகொண்டதுமான இரு சுருள்வில்கள் தனிச்சீரிசை இயக்கம் மேற்கொள்ளும்போது அவை சம பெரும திசைவேகங்களை கொண்டுள்ளன. அவற்றில் தொங்கவிடப்பட்ட நிறைகள் சமமெனில் அவைகளின் வீச்சுகளின் தகவு ________.

  • A \(({k_2\over k_1})^{1/2}\)
  • B \(({k_1\over k_2})\)
  • C \(({k_2\over k_1})\)
  • D \(({k_1\over k_2})^{1/2}\)

Question - 9

படத்தில் தொகுதி 1 தொகுதி 2 உடன் மோதி ஒட்டிக் கொள்கிறது இதனால் ஏற்படும் தனிச்சீரிசை இயக்கத்தின் வீச்சு ________.

  • A \(v\sqrt{m\over K}\)
  • B \(v\sqrt{k\over m}\)
  • C \(v\sqrt{2k\over m}\)
  • D \(v\sqrt{m\over 2K}\)

Question - 10

தனிச்சீரிசை செய்யும் துகள் ஒன்று kocos2\(\omega t\) இயக்க ஆற்றலை கொண்டுள்ளது. நிலை ஆற்றலின் பெரும மதிப்பு மற்றும் மொத்த ஆற்றல் முறையே ________.

  • A 0 மற்றும் 2K0
  • B K0 மற்றும் 2K0
  • C K0 மற்றும் 2K0
  • D \(K_ 0 \over 2\)மற்றும் K0