

நீட் உயிரியல் - மனித இனப்பெருக்கம்
Exam Duration: 60 Mins Total Questions : 30
கீழ்க்கண்டவற்றுள் எந்த நாளத்தின் மூலம் விந்துப்பையிலிருந்து விந்தணு வெளியேறுகிறது?
- (a)
ஊல்பியன் நாளம்
- (b)
முல்லேரியன் நாளம்
- (c)
சிறுநீர் நாளம்
- (d)
விந்து பீச்சு நாளம்
விந்து பீச்சுதலுக்கு முன் விந்தணு சேமிக்கப்படும் இடம்.
- (a)
எபிடைடிடைமிஸ்
- (b)
விந்துக் குழாய்
- (c)
சிறுநீர் நாளம்
- (d)
கருப்பை மஸ்குலினா
இன்டர்திசியல் செல்கள் பின்வருமாறு அழைக்கப்படும்
- (a)
செர்டோலி செல்கள்
- (b)
லீடிக் செல்கள்
- (c)
முதல் நிலை ஸ்பெர்மெட்டோசைட்டுகள்
- (d)
இரண்டாம் நிலை ஸ்பெர்மெட்டோசைட்டுகள்
கீழ்க்கண்டவற்றுள் எவற்றிலிருந்து டெஸ்டோஸ்டீரான் சுரக்கும்?
- (a)
லீடிக் செல்கள்
- (b)
செர்டோலி செல்கள்
- (c)
பாலிக்கிள் செல்கள்
- (d)
விரைச்சிதைவு செல்கள்
ஆன்ட்ரெம் என்பது
- (a)
மூன்றாம் நிலை பாலிக்கிள்கள்
- (b)
இரண்டாம் நிலை பாலிக்கிள்கள்
- (c)
கிரானுலோசா செல்களிலுள்ள திரவம் நிரப்பப்பட்ட பகுதி
- (d)
ஒரு இணைப்புத் திசு
பின்வருவனவற்றுள் சரியானதை தேர்ந்தெடு
i. அரியோலாவின் (மார்பகத்தில் காம்பு தோல் பகுதி )மேல்புறம் பல செபேஷியஸ் (கொழுப்பு) சுரப்பிகள் காணப்படும்
ii. இவற்றில் சில மயிர் பாலிக்கிள்கள் மற்றும் மெல்லிய தசை நார்களுடன் இணைந்து இறுக்கத்தின் போது பால் காம்பினை விரைப்பு அடைய செய்கின்றன.
iii. மார்பகத்தில் எவ்வித தசையுமில்லை
- (a)
i & ii சரியானவை
- (b)
ii & iii சரியானவை
- (c)
i & iii சரியானவை
- (d)
i ,ii & iii சரியானவை
ஸ்பெர்மெட்டிட்டுகள் விந்தணுவாக மாற்றம் அடையும் நிகழ்வு
- (a)
ஸ்பெர்மெட்டோஜெனிஸிஸ்
- (b)
ஸ்பெர்மியோஜெனிஸிஸ்
- (c)
ஸ்பெர்மியோசன்
- (d)
ஸ்பெர்மேட்டிட் உருவாதல்
விந்தணு நகர உதவுவது
- (a)
அக்ரோசோம்(விந்தணு தலையுறை)
- (b)
சென்ட்ரியோஸ்
- (c)
மைட்டோகாண்ட்ரியா
- (d)
வால்
முதன் முதலில் நிகழும் மாதவிடாய்
- (a)
மெனோபாஸ்
- (b)
மெனார்க்
- (c)
கிளைமெட்ரிக் (பால் பருவ முடிவு)
- (d)
இவையேதுமில்லை
விந்தணு தூண்டால் இவ்வாறு அழைக்கப்படும்
- (a)
கருவுறுதல்
- (b)
விந்து-அண்டசேர்க்கை
- (c)
கார்டிகல் வினை(மேற்பரப்பு)
- (d)
ஆம்பிமிக்ஸிஸ் (உபகலப்பு)
கருப்பதித்தல் நிகழ்வதை குறிப்பது
i.உட்புற செல்கள் எண்டோமெட்ரியத்துடன் ஒட்டியிருக்கும்
ii.டிரோபோபிளாஸ்ட்லிருந்து சுரக்கப்படும் புரோட்டியோலக்டிக் என்சைம்கள் எண்டோ மெட்ரிய செல்கள் நீக்கும்.
iii.அசாதாரண இடங்களில் கருப்பதித்தலை சோனா பெல்லுசிடா தடுக்கும்
- (a)
i & ii சரியானவை
- (b)
ii & iii சரியானவை
- (c)
i & iii சரியானவை
- (d)
i,ii & iii சரியானவை
குழந்தை பிறப்பு இவ்வாறு அழைக்கப்படும்
- (a)
கரு வளர் காலம்
- (b)
பார்ச்சூரிசன்
- (c)
சிறுநீர் கழிப்பு
- (d)
இவையேதுமில்லை
எக்டோபிக் கர்ப்பம் என்பது
- (a)
கருப்பையை தவிர வேறு இடத்தில் கருபதித்தல்
- (b)
கருப்பையில் குறைபாடுடைய கருவை பதித்தல்
- (c)
ஹார்மோன் ஏற்றத் தாழ்வினால் கரு கலைதல்
- (d)
மரபியல் மாறுபாட்டுடன் கருவுறுதல்
இனப்பெருக்க உறுப்பிற்கும், சீறுநீர் மண்டலத்திற்குமான பொதுவான நாளம்
- (a)
வாஸ் டிபரன்ஸ்
- (b)
வாஸா எபரென்சியா
- (c)
சீறுநீர் குழாய்
- (d)
சிறுநீர் நாளம்
கீழ்க்கண்டவற்றுள் எந்த நிகழ்வு பிளவுறுதலில் தனித்தன்மையானது?
- (a)
புதிய செல்களின் பிளாஸ்மா உரை பிரியாது
- (b)
செல்களில் ஸ்பின்டில் அமைப்பு தோன்றாது
- (c)
செல்களின் வளர்ச்சி தென்படாது
- (d)
எந்த வித உட்கருவும் பங்கு கொள்ளாது
விந்தக பிளாஸ்மாவில் அதிக ஆரம்ப நிலையில்
- (a)
பிரக்டோஸ் கால்சியம் மற்றும் சில என்சைம்கள் (நொதிகள்)
- (b)
பிரக்டோஸ் மற்றும் கால்சியம்
- (c)
குளுக்கோஸ் மற்றும் சில என்சைம்கள் (நொதிகள்)
- (d)
பிரக்டோஸ் மற்றும் சில என்சைம்கள் (நொதிகள்)
'உலகளவிலான மக்கள் உடல்நலத் திட்டம்' 2000AD என்ற திட்டம் யாரால் கொண்டுவரப்பட்டது
- (a)
இந்திய சுகாதாரத்துறை
- (b)
அமெரிக்க சுகாதாரத்துறை
- (c)
உலக சுகாதார நிறுவனம்
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
காப்பர் - T எத்தனை நாட்கள் வரை பெண்ணின் கருப்பையினுள் இருக்கும்?
- (a)
3 மாதங்கள்
- (b)
ஓராண்டு
- (c)
மூன்றாண்டு
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
I) ஹார்மோன் பயன்பாட்டு முறைகளால் அண்டநாளத்தின் வழியே அண்ட அணு இறங்குதலும் நிறுத்தப்படும்.
II) மேலும் இவை என்டோமெட்ரியம் எனும் கருப்பை உட்சுவரைத் தடிமன் இழக்கச் செய்கின்றன.
இவற்றில்
- (a)
I மட்டும் சரி
- (b)
II மட்டும் சரி
- (c)
இரண்டும் சரி
- (d)
இரண்டும் தவறு
கீழ்க் காண்பவைகளில் ஒன்று ஹார்மோனை வெளிப்படுத்தும் கருப்பையாகமான சாதனம் ஆகும்.
- (a)
மல்டிலோட் 375
- (b)
LNG - 20
- (c)
செர்வைகல் தொப்பி
- (d)
வால்ட்
விந்து திரவத்தின் பெருபான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி
- (a)
விந்துப்பை
- (b)
பல்போயுரித்ரல் சுரப்பி
- (c)
புரோஸ்டேட் சுரப்பி
- (d)
கோழைச் சுரப்பி
பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது?
- (a)
விதைப்பை
- (b)
ஆண்குறி
- (c)
சிறுநீர் வடிகுழல்
- (d)
விந்தகம்
பாலூட்டியின் முட்டை
- (a)
மீசோலெசிதல் ஓடற்றது
- (b)
மைக்ரோலெசிதல், ஓடற்றது
- (c)
ஏலெசிதல், ஓடற்றது
- (d)
ஏலெசிதல், ஓடுடையது
சீம்பாலில் அதிகம் காணப்படுவது
- (a)
IgE
- (b)
IgA
- (c)
IgD
- (d)
IgM
A - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
R - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
- (a)
A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம்
- (b)
A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை
- (c)
A உண்மை, R பொய்
- (d)
A மற்றும் R இரண்டுமே பொய்
ஆண்களில் உள்ள புரோஸ்டேட் சுரப்பிக்கு இணையாக பெண்களில் உள்ளவை.
- (a)
ஸ்கீன்ஸ் சுரப்பி
- (b)
பர்த்தோலின் சிறப்பு
- (c)
பால் சுரப்பி
- (d)
வியர்வைச் சுரப்பி
கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.
- (a)
கூற்றும், காரணமும் சரி.
- (b)
இரண்டும் தவறு
- (c)
கூற்று சரி, காரணம் தவறு.
- (d)
கூற்றுதவறு, காரணம் சரி
கருவின் இதயம் ________ வாரம் உருவாகின்றது.
- (a)
முதல்
- (b)
இரண்டாம்
- (c)
மூன்றாம்
- (d)
நான்காம்
ஆண்களில் புராஸ்டேட் சுரப்பிகளுக்கு ஒப்பாக பெண்களில் உள்ளவை
- (a)
பர்தோலின் சுரப்பி
- (b)
ஸ்கீன்ஸ் சுரப்பி
- (c)
ஏரியோலோ சுரப்பி
- (d)
பால் சுரப்பி
பொருந்தாத இணை கண்டறி
- (a)
கருவளர்ச்சி காலம் - 40 வாரங்கள்
- (b)
முதல் முப்பருவம் - இதய உருவாக்கம்
- (c)
இரண்டாம் முப்பருவம் - முகம் உருவாக்கம்
- (d)
மூன்றாம் முப்பருவம் - 8 வது மாத முடிவில்