நீட் - இயற்பியல் - துகள்களின் அமைப்பு மற்றும் சுழல் இயக்கம்

Question - 1

மூன்று நிறைகள் 2 kg,4 kg மற்றும் 6kg ஆகியவை XY தளத்தில் முறையே (0,0),(0,2) மற்றும் (2,2) ஆயத் தொலைவுகளில் வைக்கப்பட்டுள்ளன.நிறைகளின் மையத்தின் ஆயத் தொலைவு.

 • A (1,1.67)
 • B (1,2)
 • C (2,1.67)
 • D (2,0.67)

Question - 2

இரு வட்டத் தகடுகள் ஒரே பொருளாலானது மற்றும் ஒரே நிறையுடையது.அவற்றின் தடிமன்கள் விகிதம் 1:3 எனில் அவற்றின் நிலைமத்திருப்புத் திறன்களின் விகிதம்.

 • A 3:1
 • B 1:3
 • C 1:9
 • D \(1:\sqrt 3\)

Question - 3

ஒரு திடக்கோளம் h உயரமுடைய சாய்தளத்திலிருந்து சறுக்காமல் உருண்டு கீழ் நோக்கி வருகிறது.சாய்தளத்தின் அடிப்பாகத்தை அடையும் போது கோளத்தின் திசைவேகம்.

 • A \(\sqrt {gh}\)
 • B \(\sqrt {\frac{10}{7}gh}\)
 • C \(\sqrt {\frac{7}{10}gh}\)
 • D \(\sqrt {\frac{10}{3}gh}\)

Question - 4

ஃ பிளைவில் ஒன்றின் கோணத் திசைவேகம் காலத்தைச் சார்ந்து \(\omega =p-qt\) என மாறுகிறது.இதில் P  மற்றும் q  என்பவை மாறிலிகள்.ஓய்வுக்கு வரும் முன் திரும்பும் கோணம்.

 • A \(\frac{q}{p}\)
 • B \(\frac{p^2}{2q}\)
 • C \(\frac{q^2}{2p}\)
 • D \(\frac{p}{q}\)

Question - 5

\(4\times 10^{-3}kgm^2\)நிலைமத்  திருப்புத் திறன் கொண்ட ஒரு சக்கரம் விநாடிக்கு  10 சுற்றுகள் வீதம் சுற்றுகிறது.5 விநாடிகள் அதனை நிறுத்துவதற்குத் தேவையான திருப்பு விசை.

 • A \(2\pi \times 10^{-3}Nm\)
 • B \(8\pi \times10^{-3}Nm\)
 • C \(16\pi \times10^{-3}Nm\)
 • D \(8\times10^{-3}Nm\)

Question - 6

20 kg  நிறை கொண்ட இரு பையன்கள் 4m நீளமும் 10 kg நிறையும் கொண்ட ஒரு சட்டத்தின் எதிரெதிர் முனைகளில் அமர்ந்துள்ளனர்.சட்டம் அதன் மையத்தின் வழியே செங்குத்தாகச் செல்லும் அச்சைப் பற்றி 10 சுற்றுகள்/நிமிடம் வீதத்தில் சுற்றுகிறது.ஒவ்வொரு பையனும் தரையைத் தொடாமல் 1 m தூரம் மையத்தை நோக்கி நகர்ந்தால் அதன் கோணத் திசைவேகம்.(சுமாராக)

 • A 32.64 rev/min
 • B 3.25 rev/min
 • C 16.25  rev/min
 • D 20  rev/min

Question - 7

புவியின் ஆரமானது திடீரென்று தற்போதைய மதிப்பில் 0.75 மடங்காக சுருங்கினால் ஒரு நாளின் நீளம்.

 • A 12 மணி
 • B 18 மணி
 • C 15.5 மணி
 • D 13.5 மணி

Question - 8

ஒரு சமச்சீரானப் பொருள் அதன் சமச்சீர் அச்சில் சுழல்கிறது அதன் கோண உந்தம் இரு மடங்கானால் சுழற்சி இயக்க ஆற்றல்.

 • A இரு மடங்காகும்
 • B நான்கு மடங்காகும்
 • C எட்டு  மடங்காகும்
 • D பாதியாகும்

Question - 9

m  நிறையுடையத் துகள் ஒன்று ஆதிப்புள்ளியிலிருந்து கிடைத்தளத்தில் 300 கோணத்தில் v திசைவேகத்தில் செலுத்தப்படுகிறது.துகளானது பெரும உயரத்தில் உள்ளபோது செலுத்தப்பட்ட புள்ளியைப் பொருத்த துகளின் கோண உந்தத்தின் அளவு.

 • A \(\frac{\sqrt 3}{16}.\frac{mv^3}{g}\)
 • B \(\frac{\sqrt 3}{8}.\frac{mv^3}{g}\)
 • C \(\frac{\sqrt 3}{16}.\frac{mv}{g}\)
 • D \(\frac{\sqrt 3}{8}.\frac{mv^2}{g}\)

Question - 10

ஒரே அளவு ஆரம் R  கொண்ட ஒரு வட்ட வளையம், ஒரு உள்ளீடற்ற உருளை மற்றும் ஒரு திட உருளை ஆகியவை h உயரம் உடைய சாய்தளத்தில் சறுக்கிவராமல் உருண்டு வருகின்றன.சாய்தளத்தின் அடிப்பாகத்தை அடையும் போது அவைகளின் திசைவேகங்களின் விகிதம் .

 • A 1:1:1
 • B \(1:\sqrt 2:3\)
 • C \(1:1:\frac{2}{\sqrt 3}\)
 • D \(1:\sqrt 2:\sqrt 3\)
Facebook
Twitter
Google+
Email