நீட் வேதியியல் - புறப்பரப்பு மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
ஒரு தொங்கலிலிருந்து ஒரு கூழ்மம் உருவாவது
- (a)
கூழ்மமாக்கல்
- (b)
தொகுப்பு முறை
- (c)
வண்டலாக்குதல்
- (d)
துண்டுதுண்டாக்குதல்
நிலைமாறு மிசெல் செரிவில் (CMC யில்) ஒருங்கிணைத்த துகள்களின் மூலக்கூறுகள்
- (a)
சிதைகின்றன
- (b)
ஒன்று சேர்கின்றன
- (c)
பிரிகையடைகின்றன
- (d)
இவற்றில் எதுவுமில்லை
இதில் பரப்புக் கவர்ச்சியானது பல அடுக்குகளாகும்.
- (a)
இயற்பியல் பரப்புக் கவர்ச்சி
- (b)
வேதியல் பரப்புக் கவர்ச்சி
- (c)
இரண்டும்
- (d)
இவற்றில் ஏதுமில்லை
கீழ்க்கண்டவற்றில் எது உடன் பணியாற்று கூழ்மமாகும்? (associate colloid)
- (a)
புரதம் + நீர்
- (b)
சோப் + நீர்
- (c)
ரப்பர் + பென்சீன்
- (d)
பால்
உண்மைக் கரைசலிலுள்ள கரைபொருள் துகளின் பருமன் Vs ஆனது கூழ்மத்துகளின் பருமன் Vc உடன் ஒப்பிடும் போது
- (a)
\(\frac { Vc }{ Vs } \approx { 10 }^{ 3 }\)
- (b)
\(\frac { Vc }{ Vs } \approx { 10 }^{ -3 }\)
- (c)
\(\frac { Vc }{ Vs } \approx { 10 }^{ 23 }\)
- (d)
\(\frac { Vc }{ Vs } \approx 1\)
இயற்பியல் பரப்புக் கவர்ச்சியில் பரப்புக் கவர்ச்சி வெப்பத்தின் எல்லை (kJ /mol)
- (a)
40 - 400
- (b)
10 - 40
- (c)
200 - 400
- (d)
40 - 100
இயற்கையில் இயற்பியல் பரப்புக்கவர்ச்சி வெப்ப உமிழ் வினையாக இருப்பதற்கு காரணம்
- (a)
\(\triangle\) H < O
- (b)
\(\triangle\) H > O
- (c)
\(\triangle\) H = O
- (d)
இவற்றில் ஏதுமில்லை
Pd மீது H2 வாயு மூலக்கூறுகள் பரப்பில் கவரப்படுவதற்கான காரணம்
- (a)
ஒடுக்கம்
- (b)
அடைபடுதல் (Occlusion)
- (c)
நீரேற்றம்
- (d)
ஹைட்ரஜனேற்றம்
ஊக்கப்பட்ட கரி மீது ஆக்சாலிக் அமிலம் பரப்புக் கவர்ச்சி அடைவதில், ஊக்குவிக்கப்பட்ட கரியானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
- (a)
பரப்புக் கவர்பவர்
- (b)
பரப்பில் கவரப்படும் பொருள்
- (c)
பரப்புக் கவரும் பொருள்
- (d)
அடைபடுதல் (occlusion)
ப்ரூண்ட்லிச் பரப்புக்கவர்ச்சி சமவெப்பநிலைக் கோட்டில் 1/n ன் மதிப்பு
- (a)
அனைத்து வகைகளிலும் 0 முதல் 1 வரை
- (b)
அனைத்து வகைகளிலும் 2 முதல் 4 வரை
- (c)
இயற்பியல் பரப்புகவர்ச்சியில் 1 ஆகும்
- (d)
வேதியல் பரப்புகவர்ச்சியில் 1 ஆகும்
C6H12O6(aq) + H2(g) \(\rightleftharpoons \) C6H14O6(aq) என்ற வினைக்கு,வினைவேக மாற்றி சேர்க்கப்படும் போது கீழ்கண்ட எது பாதிக்கப்படுவதில்லை?
- (a)
முன்னோக்கு வினையின் வேகம்
- (b)
பின்னோக்கு வினையின் வேகம்
- (c)
சமநிலை எய்துவதற்கான காலம்
- (d)
தன்னிச்சை தன்மை
கீழ்க்கண்டவற்றில் எது ஒளிவேதி நச்சுப் புகை மண்டலத்தின் (photo chemical smog) ஒரு பொதுவான பகுதிப்பொருள் அல்ல?
- (a)
பெராக்ஸி அசிட்டைல் நைட்ரேட்
- (b)
குளோரோ ப்ளூரோ கார்பன்
- (c)
ஓசோன்
- (d)
அக்ரோலின்
மூடுபனி (Fog) என்பது இதன் கூழ்ம கரைசலாகும்
- (a)
வாயுவில் திண்மம்
- (b)
வாயுவில் வாயு
- (c)
வாயுவில் நீர்மம்
- (d)
நீர்மத்தின் வாயு
கீழ்க்கண்டவற்றில் எது வேதிக் பரப்புக்கவற்சியின் பண்பு அல்ல?
- (a)
பரப்புக் கவர்ச்சியானது பல படலங்களை பெற்றிருக்கலாம்
- (b)
பரப்புக் கவர்ச்சி தேர்ந்து செயலாற்றும் தன்மையுடையது
- (c)
\(\triangle \)H ஆனது 400 KJ என்ற அளவில் இருக்கும்
- (d)
பரப்புக் கவர்ச்சி மீள் தன்மையற்றது
ஒரு ஸ்பாஞ்சை நீரில் நனைப்பது இதற்கு எடுத்துக்காடாகும்
- (a)
எளிய பரப்புக் கவர்ச்சி
- (b)
இயற்பியல் பரப்புக் கவர்ச்சி
- (c)
வேதிப் பரப்புக் கவர்ச்சி
- (d)
உறிஞ்சுதல்
மாசுகளை கொண்டுள்ள நீர், பொட்டாஷ் படிகாரம் சேர்ந்து துய்மை செய்யப்படுகிறது. பொட்டாஷ் படிகாரத்திலுள்ள Al3+ ஏற்படுத்துவது
- (a)
எதிர்மின்கலங்கல் தன்மையின் கூழ்மமாக்கல்
- (b)
எதிர்மின்கலங்கல் தன்மையின் திரிதல்
- (c)
நேர்மின் கலங்கல் தன்மையின் கூழ்மமாக்கல்
- (d)
நேர்மின் கலங்கல் தன்மையின் திரிதல்
கீழ்கண்ட சொற்றொடர்கள் செயல் திறன் மற்றும் தேர்ந்து செயலாற்றும் தன்மை பற்றியதாகும்
அ) வினைவேகமாற்றிகளின் செயல் திறன் என்பது ஒரு வினையை ஊக்குவிக்கும் திறனாகும் மற்றும் தேர்ந்து செயலாற்றும் தன்மை எனபது குறிப்பிட்ட விளை பொருளை உருவாக்க, வினைவேக மாற்றிகளின் ஊக்குவிக்கும் திறனாகும்.
ஆ) வினைவேக மாற்றிகளின் செயல் திறன் என்பது குறிப்பிட்ட விளை பொருளை உருவாக்க, வினைவேக மாற்றிகளின் ஊக்குவிக்கும் திறனாகும் தேர்ந்து செயலாற்றும் தன்மை எனபது குறிப்பிட்ட விளை பொருளை ஊக்குவிக்கும் திறனாகும்.
- (a)
(அ)
- (b)
(ஆ)
- (c)
(அ) மற்றும் (ஆ)
- (d)
இவற்றில் ஏதுமில்லை
400 K ல் வினை வேக மாற்றி முன்னிலையில் ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் 0.8 kca குறைக்கப்படுகிறது. எனவே வினையின் வேகமானது (R = 2cal/deg/mol)
- (a)
2.72 மடங்கு அதிகரிக்கிறது
- (b)
1.18 மடங்கு அதிகரிக்கிறது
- (c)
2.72 மடங்கு குறைகிறது
- (d)
6.26 மடங்கு அதிகரிக்கிறது
k = Ae-Ea/RT என அறிவோம்
வினைவேக மாற்றியின் முன்னிலையில் வேக மாறிலி k' என்க
∴ k' = Ae-(Ea-0.8) / RT
எனவே \(\frac { k' }{ k } ={ e }^{ 0.8/RT }\frac { 0.8 }{ =e\quad 0.002\times 400 } \)
e = 2.72 மடங்கு
FeCl3 ஐ பயன்படுத்தும் போது இரத்தக்கசிவு நிறுத்தப்படுகிறது. ஏனெனில்
- (a)
இரத்தம் எதிர் திசையில் செல்ல துவங்குகிறது
- (b)
இரத்தம் வினைபுரிந்து ஒரு திண்மமாக உருவாகிறது; இது இரத்தக் குழாயை மூடுகிறது
- (c)
இரத்தம் திரிகிறது மற்றும் இரத்தக் குழாய் மூடப்படுகிறது
- (d)
பெர்ரிக் குளோரைடு இரத்தக் குழாயை மூடுகிறது
வயிற்றுக் கோளாறுகளுக்குப் பயன்படும் பால்மம்
- (a)
அர்ஜிரால்
- (b)
மக்னீசிய பால்மம்
- (c)
கூழ்மத்தங்கம்
- (d)
கூழ்ம ஆன்டிமனி
வினைவேக மாற்றியினால் ஒரு வினையின் வேகம் அதிகரிப்பதை பின்வரும் எந்தக் காரணி சரியாகக் கூறுகிறது?
- (a)
வடிவத்தைத் தேர்தெடுத்தல்
- (b)
துகளின் உருவளவு
- (c)
கட்டிலா ஆற்றில் அதிகரித்தல்
- (d)
கிளர்வுற்ற ஆற்றல் குறைதல்
கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத்துகள்கள் மின்புலத்தில் நகர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- (a)
மின்முனைக் கவர்ச்சி
- (b)
கூழ்மப் பிரிப்பு
- (c)
மின்னாற் சவ்வூடுப்பரவல்
- (d)
மின்னாற் கூழ்மப் பிரிப்பு
பிரிநிலை நீர்மமாகவும், பிரிகை ஊடகம் வாயுவாகவும் இருந்தால் அக்கூழ்மத்தின் பெயர்
- (a)
கரைசால்
- (b)
பால்மம்
- (c)
நீர்ம காற்றுக் கரைசல்
- (d)
நுரைப்பு
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூழ்மங்களுள் எது நீண்ட நேரம் நிலையாக இருக்காது?
- (a)
ஸ்டார்ச்சு கூழ்மம்
- (b)
சோப்புக் கூழ்மம்
- (c)
பனிமூட்டக் கூழ்மம்
- (d)
இரப்பர் லேட்டக்ஸ் கூழ்மம்
பிரிகை ஊடகத்தில், கூழ்மத் துகள்கள் அங்கும் இங்கும் தாறுமாறாக ஒழுங்கின்றித் திரியும் செயலின் பெயர்
- (a)
டின்டால் விளைவு
- (b)
பிரௌனியன் இயக்கம்
- (c)
சவ்வூடு பரவல்
- (d)
கூழ்மம் பிரிப்பு
வானம் நீலநிறமாகக் காணப்படுவதன் காரணம்
- (a)
பரப்புக் கவர்ச்சி
- (b)
பிரிகையடைதல்
- (c)
பிரதிபலித்தல்
- (d)
சிதறடித்தல்
கூழ்மங்களை திரிதலடையச் செய்தல் என்பது
- (a)
கூழ்மத் துகள்களை பிரிகைக்கு உட்படுத்தல்
- (b)
கூழ்மத் துகள்களை வீழ்படிவாக்கல்
- (c)
கூழ்மத் துகள்கள் ஒளியைச் சிதறடித்தல்
- (d)
கூழ்மத் துகள்கள் தாருமாறாக ஒழுங்கின்றி நகர்தல்
வேதிப் பரப்புக் கவர்தலில் எது தவறானது?
- (a)
மீளாத் தன்மையுடையது
- (b)
இதற்குக் கிளர்வுறு ஆற்றல் தேவைப்படுகிறது
- (c)
பரப்புக் கவரும் பொருளின் மீது பல அடுக்குகளைத் தோற்றுவிக்கிறது
- (d)
பரப்புச் சேர்மங்கள் உருவாகின்றன
கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
- (a)
பால்மம் - தயிர்
- (b)
நுரைப்பு - பனிப்புகை
- (c)
காற்றுக்கரைசல் - புகை
- (d)
திண்மக் கூழ்மம் - கேக்
இயற்பியல் பரப்புக் கவரப்படுதல் _____ ன் போது பரப்புக் கவரப்பட்டுள்ள பொருள் வெளியேறுகிறது.
- (a)
வெப்பநிலை உயரும்
- (b)
வெப்பம் குறையும்
- (c)
அழுத்தம் உயரும்
- (d)
செறிவு அதிகரிக்கும்போது
கூழ்மத் துகள்களினால் ஒளிச் சிதறலடைவதற்குப் பெயர்
- (a)
பிரௌனியன் இயக்கம்
- (b)
டின்டால் விளைவு
- (c)
மின்முனைக் கவர்ச்சி
- (d)
ராலே சிதறல்
O/W பால்மங்களில் எது பால்மக் காரணியாக செயல்படுகிறது?
- (a)
நீண்ட சங்கிலித் தொடருடைய ஆல்கஹால்
- (b)
விளக்குக் கரி
- (c)
தொகுப்பு சோப்புகள்
- (d)
கொழுப்பு அமிலங்களின் உலோக உப்பு
பால்மம் என்பது கீழ்கண்டவற்றின் கூழ்மக் கரைசல்
- (a)
இரண்டு திண்மங்கள்
- (b)
இரண்டு நீர்மங்கள்
- (c)
இரண்டு வாயுக்கள்
- (d)
ஒரு திண்மம் மற்றும் ஒரு நீர்மம்
ஆல்கைனை ஆல்கீனாகக் குறிப்பிட்ட வினைபுரிதல் மோளம் ஹைட்ரஜனேற்றம் செய்யும் போது பயன்படுத்தப்படும் வினைவேக மாற்றி
- (a)
Ni/2500C
- (b)
Pt/250 C
- (c)
குயினோலினால் பகுதியாகக் கிளர்வுறச் செய்யப்பட்ட pd
- (d)
ரானே நிக்கல்
AS2O3 + 3H2S ➝ AS2S3 + 3 H2O என்பது கூழ்மம் தயாரிக்கும் எந்த முறைக்கு ஓர் எடுத்துக்காட்டு
- (a)
இரட்டைச் சிதைவு
- (b)
ஆக்சிஜனேற்றம்
- (c)
ஆக்சிஜன் ஓடுக்கம்
- (d)
கூழ்மங்களைப் பயன்படுத்தி கூழ்மமாக்கல்
லெட் சாம்பர் முறையில் பயன்படுத்தப்படும் வினை வேக மாற்றி
- (a)
HCl
- (b)
V2O5
- (c)
NO
- (d)
Pt
எண்ணெயில் கரையக்கூடிய சாயத்தை பால்மத்துடன் கலக்கும் போது அந்தப் பால்மம் நிறமற்றதாக இருப்பின் அந்தப் பால்மம்
- (a)
O/W
- (b)
W/O
- (c)
O/O
- (d)
W/W
களி வகைக் கூழ்மத்திற்கு ஏற்படக் உதாரணம்
- (a)
பெயிண்டு
- (b)
பால்
- (c)
பியூமைஸ்கல்
- (d)
தயிர்
டின்டால் விளைவு ஏற்படக் காரணம்
- (a)
ஒளிச்சிதறல்
- (b)
ஒளி விலகல்
- (c)
ஒளிப் பிரிகை
- (d)
ஒன்றுமில்லை
வாயுக்களை பரப்பில் கவரும் தன்மையை அதிகமாகப் பெற்றுள்ள பொருள்
- (a)
கண்ணாடி
- (b)
மரம்
- (c)
கல்கரி
- (d)
பாறை
நன்கு தூளாக்கப்பட்ட அயர்ன் வினைவேக மாற்றியாக இதில் செயல்படுகிறது?
- (a)
லெட் சாம்பர் முறை
- (b)
ஹேபர் முறை
- (c)
தொடு முறை
- (d)
சால்வே முறை
Fe(OH)6 கூழ்மத்துகள்கள் ______ அயனிகளை பரப்புக் கவர்கின்றன.
- (a)
Fe3-
- (b)
Mg2+
- (c)
Ca2+
- (d)
Cu2+
ஒளிப்படத் தட்டுகளில் பயன்படும் ஒளி உணரக் கூடிய பொருள்
- (a)
AgCl
- (b)
AgNO3
- (c)
AgBr
- (d)
AgI
ஹேபர் முறையில் இரும்பு வினையூக்கியின் நச்சாக செயல்படுவது
- (a)
Pt
- (b)
H2
- (c)
H2S
- (d)
AS2O3
இயற்புறப்பரப்பு கவர்ச்சிக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?
- (a)
மீள்தன்மை கொண்டது
- (b)
வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது
- (c)
பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு
- (d)
புறப்பரப்பு பரப்பளவு அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது
பின்வரும் பண்புகளில் பரப்பு கவர்தலுடன் தொடர்புடையது எது?
- (a)
\(\triangle G\) மற்றும் \(\triangle H\) எதிர்குறி மதிப்பையும் ΔS நேர் குறி மதிப்பையும் பெ ற்றுள்ளன.
- (b)
ΔG மற்றும் ΔS எதிர்குறி மதிப்பையும் ஆனால் ΔH நேர் குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
- (c)
ΔG எதிர்குறி மதிப்பையும் ஆனால் ΔH மற்றும் ΔS நேர் குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
- (d)
ΔG, ΔH மற்றும் ΔS அனைத்தும் எதிர்குறி மதிப்பை பெற்றுள்ளன.
கூற்று: காயத்தால் உண்டாகும் இரத்தக் கசிவை தடுக்க ஃபெர்ரிக் குளோரோடை பயன்படுத்த முடியும். இக்கூற்றை நியாயப்படுத்தும் சரியான விளக்கம் எது?
- (a)
இது உண்மையல்ல, ஃபெர்ரிக் குளோரைடு நச்சுத்தன்மை கொண்டது.
- (b)
இது உண்மை, இரத்தம் என்பது ஒரு எதிர்மின்சுமை கொண்ட கூழ்மமாகும் . Fe3+ அயனிகள் இரத்த்தை திரியச் செய்கின்றன.
- (c)
இது உண்மையல்ல, ஃபெர்ரிக் குளோரைடு ஒரு அயனிச்சேர்மமாகும், இது இரத்த ஓட்டத்தில் கலக்கிறது.
- (d)
இது உண்மை, CL- அயனியுடன் சேர்ந்து எதிர்மின் கூழ்ம ம் உருவாவதால் திரிதல் நிகழ்கிறது.
தலைமுடி கிரீம் என்பது ஒரு
- (a)
களி
- (b)
பால்மம்
- (c)
திண்மக் கூழ்மம்
- (d)
கூழ்மக் கரைசல்.
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
- (a)
பால்மம் - புகை
- (b)
களி - வெண்ணெய்
- (c)
நுரைப்பு - பனிமூட்டம்
- (d)
கலக்கப்பட்ட கிரீம் - கூழ்ம கரைசல்
ஒரு கூழ்மக்கரைசல் வழியே ஒளிகற்றையை செலுத்தும்போது காணக்கிடைக்கும் நிகழ்வு
- (a)
எதிர்மின்வாய் தொங்கலசைவு
- (b)
மின்முனைக்கவர்ச்சி
- (c)
திரிதல்
- (d)
டிண்டால் விளைவு