நீட் வேதியியல் - வெப்ப இயக்கவியல் மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
ஓர் அமைப்பு மூடப்பட்டிருக்கும் _____.
- (a)
சுற்றுப்புறத்துடன் வெப்பம் மற்றும் பருப்பொருளை பரிமாற்றம் செய்யும் போது
- (b)
சுற்றுப்புறத்துடன் வெப்பத்தை மட்டும் பரிமாற்றம் செய்து பருப்பொருளை பரிமாற்றம் செய்யாமலிருக்கும் போது
- (c)
சுற்றுப்புறத்துடன் வெப்பத்தையோ, பருப்பொருளை பரிமாற்றம் செய்யாமலிருக்கும் போது
- (d)
மேற்கண்ட ஏதுமில்லை
கீழ்கண்ட கூற்றுகளில் எது தவறு?
- (a)
வேலை ஒரு நிலைச் சார்பு
- (b)
வெப்ப நிலை ஒரு நிலைச் சார்பு
- (c)
வேலை, அமைப்பின் எல்லைகளில் தோன்றுகிறது
- (d)
தொடக்க மற்றும் இறுதி நிலைகளைக் குறிப்பிடும் போது நிலையில் ஏற்படும் மாற்றம் முழுவதும் வரையறுக்கப்படுகிறது
கீழ்க்கண்டவற்றில் அகப்பண்பு ?
- (a)
நிறை
- (b)
பருமன்
- (c)
பரப்பு இழுவிசை
- (d)
என்தால்பி
1000C யிலும், வளி அழுத்தத்திலும் H2O \(\rightleftharpoons \) H2O(g) என்ற வினைக்கு எது கீழ்க்கண்டவற்றில் உண்மை ஆகும்?
- (a)
\(\triangle\)U = 0
- (b)
\(\triangle\)H = 0
- (c)
H = \(\triangle\)U
- (d)
\(\triangle\)H = T\(\triangle\)S
கீழ்க்கண்டவற்றில் எந்த குழு அகப்பண்புகள் அல்ல?
- (a)
கொதிநிலை, pH, மோலாரிட்டி
- (b)
பருமன் , பரப்பளவு , நீளம்
- (c)
உருகுநிலை, கொதிநிலை ஏற்றம், பருமன்
- (d)
ஒளிவிலகல் எண், மோலாரிட்டி, அடர்த்தி
சரியான கூற்றை தேர்ந்து எடுக்கவும்
- (a)
சுற்றுப்புறத்திலிருந்து அமைப்பிற்கு ஆற்றல் ,வேலை வடிவத்தில் மாற்றப்பட்டால் , சுற்றுப்புறம் அமைப்பு மீது வேலை செய்கிறது மற்றும் வேலையின் (w) அளவு நேர்குறியீடூ உடையது
- (b)
அமைப்பிலிருந்து சுற்றுப்புறத்திற்கு ஆற்றல், வேலை வடிவத்தில் மாற்றப்பட்டால், சுற்றுப்புறத்தின்மீது வேலை செய்யப்படுகிறது மற்றும் வேலை (w)யின் அளவு நேர்குறியீடூ உடையது
- (c)
(1) மற்றும் (2) ஆகிய இரண்டும்
- (d)
மேற்கண்ட ஏதுமில்லை
A + B + x1 \(\rightarrow\) C + D +x2 ; சரியான கூற்றை தேர்ந்தெடு .
- (a)
x1 > x2 எனில் வெப்ப உமிழ் வினையாகும்
- (b)
x2 > x1 எனில் வெப்பங்கொள் வினையாகும்
- (c)
x1 > x2 எனில் வெப்ப உமிழ் வினையாகும்
- (d)
x1 = x2 எனில் வெப்பங்கொள் வினையாகும்
2500C லும் 1 வளி அழுத்தத்திலும் C2H4(g) CO2(g) மற்றும் H2O(1) ஆகியவற்றின் உருவதால் என்தால்பிகள் முறையே +52, -394 மற்றும் -286 KJ mol -1ஆகும். C2H4(g)ன் எரிதல் என்தால்பி _________.
- (a)
+1412 KJ mol-1
- (b)
-1412 KJ mol-1
- (c)
+141.2 KJ mol-1
- (d)
-141.2 KJ mol-1
\({ C }_{ 2 }{ H }_{ 4 }+{ 3O }_{ 2 }\rightarrow { 2CO }_{ 2 }+{ 2H }_{ 2 }O\)
\(\triangle \)Hreaction
= \(\left[ 2\times \triangle { H }_{ f }°({ CO }_{ 2 })+2\times \triangle { H }_{ f }°\left( { H }_{ 2 }O \right) \right] \)- \([\triangle { H }_{ f }°\left( { C }_{ 2 }{ H }_{ 4 } \right) ]+3\times \triangle { H }_{ f }°\left( { O }_{ 2 } \right) ]\)
= \([2(-394)+2(-286)-[52-0]=-1412kj\)
250C ல் 10L பருமனிலிருந்து 20 L அக, ஒரு மோல் நல்லியல்பு வாயு மீள் செயல் விரிவடைதலின் போது, செய்யப்படும் வேலையின் அளவு எர்க்குகளில் _________.
- (a)
2.303x298x0.82 log 2
- (b)
298x107x8.314x2.303 log 2
- (c)
2.303 x298 x 0.082 log 0.5
- (d)
2.303 x 298 x 2log 2
w = 2.303 n R T log V2/v1
= 2.303 x 1 x 8.314 x 107 x 298 x log \(\frac { 20 }{ 10 } \)
= 298 x 107 x 8.314 x 2.302 log2
Br2(l) + Cl2(g) \(\rightarrow\) 2Br cl(g) என்ற வினையின் என்தால்பி மற்றும் என்ட்ரோபி மாற்றங்கள் முறையே 30KJ mol-1 மற்றும் 105 JK-1Mol -1 ஆகும். வினையின் சமநிலை வெப்ப நிலை _________.
- (a)
285.7K
- (b)
273 K
- (c)
450 K
- (d)
300 K
\(\triangle G°=0;(\triangle H°-T\triangle S°)\)
0 = 30 x 103 - T x 105
\(T=\frac { 30\times { 10 }^{ 3 } }{ 105 } \)K = 285.71K
ஈத்தின் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றின எரிதல் \(\triangle \)H முறையே -341.1 மற்றும் -310.K cal ஆகும் ________.
- (a)
C2H2
- (b)
C2H4
- (c)
(1) மற்றும் (2)
- (d)
ஏதுமில்லை
\(\triangle \)\({ H }_{ C_{ 2 }{ H }_{ 4 } }\)= -341.1 K cal
கலோரி மதிப்பு = \(-\frac { 341.1 }{ 28 } =-12.18kcal/g\)
\(\triangle \)\({ H }_{ C_{ 2 }{ H }_{ 2 } }\) = -310kcal
கலோரி மதிப்பு = -\(\frac { 310 }{ 26 } =-11.92kcal/g\)
C2H4 சிறந்த எரிப்பொருளாகும்
298 K C-H, C-C, C = C மற்றும் H - H பிணைப்புகளின் பிணைப்பு ஆற்றல்கள் முறையே 414, 347, 615 மற்றும் 435 KJmol-1 எனில் 298 K ல் CH2 = CH2(g) + H2(g) \(\rightarrow\) CH3 - CH3(g) என்ற வினையின் என்தால்பி மாற்றம் ________.
- (a)
+250 KJ
- (b)
-250 KJ
- (c)
+125 KJ
- (d)
-125 KJ
CH2 = CH2 + H2 \(\rightarrow\) CH3
\(\triangle\)H = (BE)reactants -(BE)products
= [4 (BE)C-H +(BE)C = C + (BE)H-H]
= [6(BE)C-H + (BE)C-C]
= [4(414) + 615 + 435] - [6(414) + 347]
= 2706 - 2831 = -125 KJ
ஹேலஜன் மூலக்கூறுகளின் பிணைப்பு பிளவுரும் ஆற்றல், கீழ்கண்ட வரிசைகளில், எது சரி?
- (a)
Br2 > I2 > F2 > Cl2
- (b)
F2 > Cl2 > Br2 > I2
- (c)
I2 > Br2 > Cl2 > F2
- (d)
Cl2 > Br2 > F2 > I2
கீழ்க்கண்ட வினைகளில் எதன் திட்ட என்ட்ரோபி மாற்றம் (\(\triangle \)S0) நேர்குறியீடு உடையது மற்றும் வெப்பநிலை உயரும் போது திட்ட கிப்ஸின் கட்டிலா ஆற்றல் மாற்றம் (\(\triangle \)G0) குறைகிறது?
- (a)
C (graphite) + 1/2 O2(g) \(\rightarrow\) CO(g)
- (b)
CO(g) + 1/2O2(g) \(\rightarrow\) CO2(g)
- (c)
Mg(s) + 1/2 O2(g) \(\rightarrow\) MgO(s)
- (d)
1/2 C(graphics) + 1/2 O2(g) \(\rightarrow\) 1/2 CO2(g)
C(graphite) +12 O2(g) \(\rightarrow \)CO(g)
ஒழுங்கற்ற தன்மை அதிகரிப்பதால் என்ட்ரோபி அதிகரிக்கிறது எனவே \(\triangle \)S0 நேர்குறியீடு உடையது.
பொதுவாக அனைத்து எரிதல் வினைகளும் வெப்ப உமிழ் வினைகளாகும் எனவே H = -ve.
\(\triangle \)G = \(\triangle \)H - T\(\triangle \)S0
\(\triangle \)G = (-ve) - T (+ve) = -ve
எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது \(\triangle \)G குறைகிறது
27oC வெப்பநிலையில் மாறா காண அளவில் எத்திலினின் எரிதல் வினை வெப்பம் -1406 kJ.Mole-1ஆகும். அதே வெப்ப மதிப்பை மாறா அழுத்தத்தில் கணக்கீடு.
- (a)
+1411 KJ
- (b)
+1406 KJ
- (c)
-1411 KJ
- (d)
+703 KJ
எந்த செயல் முறையில் அதிக வேலை செய்யப்படுகிறது?
- (a)
மீள் செயல் முறை
- (b)
மீளாச் செயல் முறை
- (c)
வெப்ப உமிழ் வினை
- (d)
சுற்று செயல் முறை
வினைப்படு பொருள், மற்றும் வினைவிளை பொருள்களின் அக ஆற்றல் முறையே ER மற்றும் EP எனவே வெப்பம் உமிழ் வினையில் அவை ______.
- (a)
EP = ER
- (b)
EP
R - (c)
EP > ER
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
ஒரு செயலின் வெப்ப அளவிற்கும் வெப்பநிலைக்கு உள்ள விகிதம் அதன் _______ ஜக் குறிக்கிறது.
- (a)
வெப்பமாறா அளவு
- (b)
கட்டிலா ஆற்றல் மதிப்பு
- (c)
என்டரோபி மதிப்பு
- (d)
தன்னிச்சைச் செயல்
வலிமை மிகு அமிலத்திற்கும் வலிமை மிகு காரத்திற்கும் இடையே உள்ள நடுநிலையாக்கல் வினை வெப்பம்______.
- (a)
57.4 KJ mol-1
- (b)
-5.4 KJ mol-1
- (c)
56.0 KJ mol-1
- (d)
-56.0 KJ mol-1
வலிமை குறைந்த அமிலம், வலிமை மிக்க காரத்தால் நடுநிலையாக்கப்படும் போது வெளிப்படும் வெப்ப அளவு ______.
- (a)
-57.32 KJ
- (b)
+57.32 KJ
- (c)
-57.32 KJ +வலிமை குறைந்த அமிலத்தின் அயனியாதல்
- (d)
-57.32 KJ -க்கும் அதிகமான வெப்பம்
கீழ்க்கண்டவற்றுள் எது நிலைசார்பற்றது?
- (a)
என்ரோபி (S)
- (b)
வெப்பம் (H)
- (c)
கட்டிலா ஆற்றல் (G)
- (d)
உட்கவரப்பட்ட வெப்பம் (q)
ஓர் திரவத்தின் மோலார் ஆவியாதல் வெப்பத்தினை கணக்கிட பயன்படுவது
- (a)
டிரவுட்டன் விதி
- (b)
பெஜான்ஸ் விதி
- (c)
கிப்ஸ் சமன்பாடு
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
ஒரு கெல்வின் என்பது நீரின் மும்மைப் புள்ளியில் _________ ஆகும்.
- (a)
\(\frac{1}{273.16}\)
- (b)
\(\frac{10}{273.16}\)
- (c)
\(\frac{1}{100}\)
- (d)
\(\frac{10}{373}\)
என்தால்பி H மற்றும் அக ஆற்றல் U-விற்கும் உள்ள தொடர்பு ______.
- (a)
H = U + PV
- (b)
H = P + U + V
- (c)
H = U-PV
- (d)
H = U-TS
ஒரு வினையின் ∆G எதிர்க்குறியைப் பெற்றிருந்தால், அதில் ஏற்படும் மாற்றம்
- (a)
தன்னிச்சையானது
- (b)
தன்னிச்சையற்றது
- (c)
மீள்தன்மையுடையது
- (d)
மீள்தன்மையற்றது
எந்த வினைக்கு ∆H, ∆E இரண்டும் ஒன்றே?
- (a)
NaOH ஆல் HCl நடுநிலையாக்கப்படுவதால்
- (b)
H2Oஆவியாதல்
- (c)
CH4 எரிதல்
- (d)
CO2 உருவாதல்
ஓர் அமைப்பு ஒழுங்கான நிலையிலிருந்து ஒழுங்கற்ற நிலைக்கு தன்னிச்சையாக மாறும்போது அதன் என்ட்ரோபி
- (a)
குறைகிறது
- (b)
பூஜ்யமாகிறது
- (c)
அதிகரிக்கிறது
- (d)
முதலில் அதிகரித்துப் பின் குறைகிறது
எத்திலீனின் எரிதல் என்தால்பி சமன்பாட்டில் ∆ng ன் மதிப்பு ______.
- (a)
-2
- (b)
-1
- (c)
+1
- (d)
+3
C(gr) + O2(g)⇾CO2(g), ∆H = -394 KJ
CO(g) + 1/2 O2(g)⇾CO2(g), ∆H =-284 KJ, எனில் CO உருவாதல் வெப்பத்தின் மதிப்பு
- (a)
-678 KJ
- (b)
+110 KJ
- (c)
+678 KJ
- (d)
-110 KJ
கீழ்க்கண்டவற்றில் எது என்ட்ரோபியின் அலகு ஆகும்?
- (a)
கலோரி டிகிரி-1 மோல்-1
- (b)
JK-1 mol-1
- (c)
KJK-1
- (d)
லிட்டர் வளிமண்டலம் K-1 மோல் -1
கீழ்க்கண்டவற்றில் மீள் செயல் முறை எது?
- (a)
விரவுதல்
- (b)
உருகுதல்
- (c)
நடுநிலையாக்கல்
- (d)
எரிதல்
மூன்று வெப்பவினைகளின் சமன்பாடுகள் பின்வருமாறு:
(i) C(கிராபைட்)+ O2(g)⇾CO2(g);∆rHo = x KJmol-1
(ii) C(கிராபைட்)+ \(\frac{1}{2}\)O2(g)➝CO2(g);∆rHo = y KJ mol-1
(iii) CO(g) + \(\frac{1}{2}\)O2(g)➝CO2(g);∆rHo = z KJ mol-1
மேற்கண்ட வினைகளில், சிறந்த தொடர்பினை கண்டுபிடி
- (a)
x = y-z
- (b)
z = x+y
- (c)
x = y+z
- (d)
y = 2z-x
பின்வரும் தொடர்களில் தன்னிச்சையான வாயு புறப்பரப்பு கவர்தலுக்கான சரியான கூற்று
- (a)
∆S எதிர் மதிப்பு மற்றும் ∆H உயர் நேர்தன்மை
- (b)
∆S எதிர் மதிப்பு ∆H உயர் எதிர் மதிப்பு
- (c)
∆S நேர் மதிப்பு மற்றும் ∆H உயர் எதிர் மதிப்பு
- (d)
∆S நேர் மதிப்பு மற்றும் ∆H உயர் நேர் தன்மை
பின்வரும் வினைகளில் எது அதிகபட்ச என்ட்ரோபி மாற்றத்தை கொண்டிருக்கும்?
- (a)
Ca(S) + ½ O2(g) → CaO(S)
- (b)
C(S) + O2(g) → CO2 (g)
- (c)
N2(g) + O2(g) → 2NO(g)
- (d)
CaCO3(S) → CaO(S) + CO2(g)
வெப்பம் மாறா செயல்முறையில் பின்வருவனவற்றுள் எது உண்மை?
- (a)
q = w
- (b)
q = 0
- (c)
ΔE = q
- (d)
PΔV = 0
பின்வரும் அளவீடுகளில் பொருண்மைசாரா பண்பு
- (a)
நிறை
- (b)
கனஅளவு
- (c)
என்தால்பி
- (d)
நிறை/கனஅளவு
300K வெப்பநிலையில் 1 x 10-3 m3 கனஅளவிலிருந்து 1 x 10-2m3 கனளவிற்கு 1 x 105Nm2 அளவுள்ள மாறா அழுத்தத்தில் ஒரு நல்லியில்வு வாயு விரிவடையும்போது செய்யப்பட்ட வேலையின் அளவு ______.
- (a)
-900J
- (b)
900kJ
- (c)
270kJ
- (d)
-900kJ
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- (a)
S-வழிச்சார்பு, G-வழிச்சார்பு
- (b)
S-நிலைச்சார்பு, G-நிலைச்சார்பு
- (c)
S-வழிச்சார்பு, G-நிலைச்சார்பு
- (d)
S-நிலைச்சார்பு, G-வழிச்சார்பு
என்ட்ரோபியை அறிமுகப்படுத்திய வெப்ப இயக்கவியல் விதி ______.
- (a)
முதல் விதி
- (b)
இரண்டாம் விதி
- (c)
மூன்றாம் விதி
- (d)
பூஜ்ஜிய விதி
வெப்ப இயக்கவியலின் முதல்விதி ஆற்றல் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ______.
- (a)
விரிவாக விளக்குகிறது
- (b)
கணிதவியல் முறைப்படி விளக்குகிறது
- (c)
இயற்பியல் முறைப்படி விளக்குகிறது
- (d)
விளக்குவதில்லை
ஒரு வினையின் கட்டிலா ஆற்றல் எதிர்குறியை பெற்றிருந்தால் அதில் ஏற்படும் மாற்றம்______.
- (a)
தன்னிசையானது
- (b)
தன்னிசையற்றது
- (c)
மீள்தன்மையுடையது
- (d)
மீள்தன்மையற்றது
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
கூற்று (A): இரண்டு வெவ்வேறு வெப்ப நிலைக்களிலுள்ள அமைப்புகள் தனித்தனியாக மூன்றாம் அமைப்புடன் வெப்ப சமநிலையில் இருந்தால், அந்த இரு அமைப்புகளும் தங்களுக்குள் வெப்ப சமநிலையில் இருக்கும்.
காரணம் (R): வெப்பநிலை மானிகளில் இத்தத்துவம் பயன்படுகிறது.
i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும்.
ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல.
iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
iv) (A) சரி (R) ஆனால் தவறு
- (a)
(i)
- (b)
(ii)
- (c)
(iii)
- (d)
(iv)
வெந்நீரை கொண்டுள்ள வெப்பம் கடத்தா குடுவை ________ அமைப்பிற்கான எடுத்துக்காட்டு.
- (a)
தனித்த அமைப்பு
- (b)
மூடிய அமைப்பு
- (c)
ஒரு படித்தான அமைப்பு
- (d)
பலபடித்தான அமைப்பு
நடைமுறையில் அனைத்து தனிமங்களின் திட்ட உருவாதல் வெப்பம் ______
- (a)
நேர்குறி
- (b)
எதிர்குறி
- (c)
பூஜ்ஜியம்
- (d)
இவை அனைத்தும்
ஒரு வினையின் ஆற்றல்களை ஆய்வறிந்தறிவதற்கான ஒரு அணுகுமுறை______.
- (a)
படிகக்கூடு ஆற்றல்
- (b)
பார்ன் -ஹேபர் சுற்று
- (c)
பாம்கலோரி மீட்டர்
- (d)
ஹெஸ்ஸின் வெப்பமாறா கூட்டல் விதி